உன் நினைவே என் சுவாசமடி 6-10

உன் நினைவே என் சுவாசமடி 6-10

அத்தியாயம்-6

இருவரும் அதிகாலையில் புனேயில் வீடு வந்து சேர்ந்ததும் ஜெபாவிற்கு ட்யூட்டிக்கு போகவேண்டியது இருந்ததால் எல்லாம் ரெடியாக எடுத்து வைத்துவிட்டு தூங்க சென்றான்.

அதற்குள்ளாகவே மோனல் தூங்கியிருந்தாள் கடடிலில் அவள் பக்கத்தில் அமர்ந்து அவள் கன்னத்தை பார்த்திருந்தான் இன்னும் சிறிது கன்றி சிவந்த தடம் இருந்தது.

அவனுக்கே ரெம்ப வருத்தமாயிற்று அவா எதாவது பேசினா இப்படியா கோவப்படுவ. கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் என எண்ணியவன்.

இவ்வளவு நாள் எப்படி ஒரு பொண்பிள்ளைய ஹாஸ்டல்ல,இப்படி தனியாவே வாழவிட்டாங்க. அவன் தங்கையை நினைத்து பார்த்தான் எப்படி செல்லம் அவா வீட்டுல இப்போ வரைக்கும். பாவம்போல தன்னை குறுக்கி சிறுபிள்ளைபோல தூங்கியவளைத்தான் பார்த்தான்.

கஷ்டப்படுறாங்க அதனால பார்க்க முடியலன்னா பரவாயில்லை. இவ அத்தைக் குடும்பம் பார்க்க வசதிதான். இவ சொத்துக்கு கல்யாணம் பண்ணப்போனாங்க அப்போ இவளுக்கும் எல்லாம் இருக்கு.

என்ன குடும்ப பிரச்சனையா இருந்தாலும் இப்படியா தனியா விட்டாங்க இவள,முட்டா பசங்க என சொல்லிக்கொண்டு படுக்கபோனவன்.

அவனுக்கு மோனலின் குடும்ப பின்னணி பற்றி விசாரிக்க ரோம்ப நேரமாகாது.அது சரியில்லை அவா மனசுல என்னக் காயமிருக்கு என அவதான் சொல்லனும்.

இவளோட பிரச்சனை என்னவா இருந்தாலும் மோனல் கடவுள் எனக்கு தந்த தேவதை.

அவ மனக்காயங்கள் எல்லாம் மாற்றி சந்தோசமா எங்க வாழ்க்கைய தொடங்கனும் என சொன்னவன் அவளது இதழில் மென்முத்தம் ஒன்றை வைத்து அவளை தனது கைவளைவில் கொண்டு வந்து அப்படியே தூங்கிப்போனான்.

காலையில் அவன் வைத்த அலாரம் அடிக்கவும் எழுந்து பார்த்தான் மனைவி இன்னுமே தூக்கத்தில்.உடற்பயிற்சிக்கு வெளியே சென்று வரும்போது பால் வாங்கிவந்து கெட்டிலில் டீ வைத்தான்.அது அவனுக்காக வாங்கியது இனி எல்லாம் மாற்றனும்.தனக்குள்ளாக சிரித்துக்கொண்டான் வந்த நாள்ல இருந்து நம்மள மௌனமாகவே ஆட்டிவைக்கிறா என சந்தோசத்தோட எண்ணிக்கொண்டான்.

நேரமாகவும் அவன் ரெடிகயாகி யூனிபார்ம் போட்டு வந்தவன் அவளை எழுப்பவும் அவள் முதலில் பார்த்தது அந்த யூனிபார்மைதான் பார்த்து பதறி கட்டிலின் ஓரம் தன் கால்களை மடித்து அமர்ந்து நடுங்கிக்கொண்டிருந்தாள்.

ஜெபாவிற்கு என்ன செய்ய எனத்தெரியவில்லை. அப்படியே நின்றுவிட்டான் சிறிது நேரம். பின்

சுதாரித்தவன் " மோனல்" என அழைக்கவும்தான் கொஞ்சம் நிதானத்திற்கு வந்தாள் .

அவளிடம் மெதுவாக நெருங்கவும் " என்ன பார்த்தா இப்படி பயந்த என்னம்மா "

அவள் " இல்லை இந்த யூனிபார்ம் எதிர்பார்க்காம அரை தூக்கத்துல பார்த்தனா உங்கள பார்த்து இல்ல சாரி " அவள் கண்கள் கெஞ்சிற்று.

அவன் சென்று அவளுக்கு தண்ணி எடுத்திட்டு வந்து கொடுத்து குடிக்க வைத்தான்.

கொஞ்சம் நார்மலா வந்தவுடனே எழுந்தவள் அவனிடம் வந்து தன்னால அவனது நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.

அவளது ஏறியிறங்கிய நெஞ்சுக்கூடே சொன்னது அவளின் பயத்தின் அளவை.

போலிஸை பார்த்தா பயப்படுவாங்க அது நார்மல்தான் இந்த யூனிபார்ம பார்த்ததுக்கே இப்படியா. எங்கயோ உதைக்குதே நினைத்தவன் அவளிடம் ஒன்றும் கேட்காமல் அவளுக்கு டீ கொடுத்து தன்னருகில் அமர்த்திக்கொண்டான்.

இன்னைக்கு சாயங்காலம் போயி வீட்டுக்குத்தேவையானதை வாங்குவோம் அப்புறமா சமையலுக்கு ஆள வரச்சொல்லுவோம் சரியா.

நீ உன் காலேஜ்ல பேசு எப்போ ஜாயின் பண்ணலாம் என கேளு சரியா.

எல்லாத்துக்கும் தலையதலைய ஆட்டவும்.

ஒரு கையால் அவள் தலையை பிடித்து நிறுத்தி. என்னப்பார்த்து வாயத்திறந்து பதில் சொல்லனும் எனக்கு அப்படி பேசறதுதான் பிடிக்கும்......

மோனல் " அவனைப்பார்த்து சரி என பதில் சொல்லவும் கிளம்பியவன். எனக்கு நேரமாயிட்டு நீ சாப்பிடு. சாப்பாடு டிரைவர விட்டு வாங்கிட்டு வரச்சொன்னேன் சரியா எனச் சொன்னவன் கிளம்பிவிட்டான்.

அவளும் அவளது கல்லூரிக்கு அழைத்து விவரம் கேட்க அவர்களும் அடுத்த நாளே வரச்சொல்லவும் சந்தோசம். வீட்ல தனியா இருக்கனும் இது வேலைக்கு போறதே நல்லது என தோன்றியது அவளுக்கு.

சாப்பிட்டு முடித்து பால்கனியில் வந்து நின்றவளின் எண்ணம் ஜெபாவிடமே

அதிரடியா எல்லாத்தையும் செய்யனும் அவனுக்கு என நினைத்த சிரித்தாள்.

முதல் நாள் முத்தம் எல்லாம் நியாபகத்திற்கு வந்ததும் கட்டிலில் படுத்து கனவிற்கு சென்றவள் அப்படியே தூங்கியும் போனாள்.

எங்கயோ போனின் சத்தம் கேட்கவும் கண்விழித்து பார்த்தாள் அவளதுதான் சட்டென எழும்பி பார்த்தாள் ஜெபாவின் நம்பர் அழைப்பை எடுத்தாள்.

ஜெபா" ரெம்ப நேரமா கால் பண்றேன் கதவை திற வெளிய நிக்குறேன்"

போனை அப்படியே போட்டு வெளியே ஓடிப்போயி கதவைத்திறந்தாள்.

" மணி எத்தனை பாரு 2 மணி சரி உன்கூட சேர்ந்து சாப்பிடலாம்னு வந்தா கும்பகர்ணி தூங்கிட்ட போல "அசடு வழிந்து ஆமா என சொல்ல சாப்பாடை எடுத்து வைத்து அவளையும் அருகே இருத்தியவன்.

" இந்த வழியாத்தான் இப்போ வந்தேன் சரி நம்ம பொண்டாட்டி நம்மள தேடுவாளோன்னு வந்தா.எங்க என்ன தேடுறது "என அலுத்துக்கொண்டவன் சாப்பட்டை எடுத்து அவளுக்கு ஊட்டிவிடவும் மடமடவென்று அவளது கண்களில் கண்ணீர்.

" 23 வருசத்துக்கு மேல ஆச்சுது.அம்மா சாப்பாடு ஊட்டினது. அதுக்கப்புறம் சாப்பாடு தட்டு என் முன்னாடி இருக்கும் சாப்பாடு விதவிதமா இருக்கும். ஆனா யாரும் சாப்பிடுன்னு சொன்னதும் இல்லை. நான் சாப்பிட்டனா இல்லையா என கவலைப்படவும் ஆளில்லை " இவ்வளவு அதிகாமா அவன்கிட்ட பேசியது இதுதான்.

அவன் அவள் சொல்லுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் சாப்பாடு ஊட்டுறத நிறுத்தவேயில்லை.

அவளும் சாப்பாட்டை வாயில் வாங்கியவாறே பேசினாள். அனிஷா வந்ததுக்கு அப்புறந்தான் எனக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்வா. கடவுள் எனக்கு குடுத்த என்னோட ஏஞ்சல் "

ஜெபா" ஆமா எங்கவீட்டு ஏஞ்சல்தான் அவ"

அவள் சாப்பாடு போதும் என்கவும் அவன் சாப்பிட ஆரம்பித்தான். அவளும் அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.சாப்பிட்டு முடித்து வெளியே செல்லும்பேது உன் மொபைல் எடுத்து வச்சிக்கோ. சாயங்காலம் கால் பண்றேன் வெளியே போறதுக்கு ரெடியா இரு எனச்சொல்லி சென்றான்.

அவர்களின் கிட்சனுக்கு தேவையானதை

வாங்கி சமையலுக்கும் ஆள் வைத்தாகிற்று அடுத்த நாளில் இருந்து மோனலும் கல்லூரிக்கு சென்று வந்தவள் சிறிது சிறிதாக சமைக்க கற்றுக்கொண்டிருந்தாள்.

ஜெபா நல்ல ரசனையா சாப்பிடுறதைப் பார்த்தவள் சமைக்கனும் என ஆசைப்பட்டு சமையல்காரம்மா அவங்கள தீதி என அழைப்பாள் சமைக்கும்போது அவர்களோட பேசிக்கிட்டே பார்த்திட்டிருப்பா.

தீதியோடு மராத்தியில் பேசுவாள். அவளது தாய்மொழி மராத்தி அவள் அம்மா இருக்குறவரைக்கும் வீட்டில் அதுதான் பேசினர். அதுக்குபிறகுதான் தமிழ் பேசவரும் ஆனால் எழுதபடிக்கத் தெரியாது. யாரு அவளுக்கு சொல்லிக்கொடுக்க.

இப்படியே ஒரு மாதம் கடந்து சென்றது. ஜெபாதான் என்னடா இது வாழ்க்கை நம்மள இப்படி வச்சு செய்யிது

என நினைப்பான். மோனலிடம் காமித்துக்கொள்ள மாட்டான்.

ஒரு நாள் அவசரமாக ஒரு நம்பர் டைப் செய்ய அவள் போனை எடுத்து நம்பர் டைப் செய்து விட்டு பார்க்க .

மச்சான் என ஒரு நம்பர் இருக்கவும் எடுத்து பார்த்தான் அது அவனோட நம்பர் பாருடா பிள்ள நம்ம நம்பர எப்படி பதிஞ்சு வச்சிருக்கு என சிரித்தவன்.

அவளது நம்பருக்கு அழைத்தான்.

அந்த சத்தத்தில் வந்து எடுத்து பார்க்கவும் அவனும் எட்டிப்பார்த்து

" யாருடா இந்த மச்சான் " எனக்கேட்கவும் அவள் தன் நாக்கை கடித்து நின்றாள் மெதுவாக அங்கிருந்து நழுவபார்க்க பிடித்துக்கொண்டான்.

அவளுக்கு வெட்கம் " ஓய் டாலி அந்த மச்சான் நான்தான...ம்ம் "

மோனல் தலையசைத்தாள் " அப்போ இந்த என்னோட செல்ல டாலிக்கு பரிசு கொடுக்கனுமே என கேட்கவும் அவனைத் தள்ளிவிட்டு ஓடிவிட்டாள். அதுக்கு பிறகு தினமும் கேட்பான் ஹேய் டாலி என்ன மச்சான்னு கூப்பிடு என.

சிறுசிறு தீண்டலும் உரசல்களும் முத்தங்களும் போதுமா என எண்ணினான். அடுத்தநிலை எப்போ போறது.

முத்தங்கொடுத்தா பிள்ளை பிறக்கும்னு இவளுக்கு யாராவது தப்பா சொல்லிக் குடுத்திட்டங்களா அதத்தாண்டி போகமுடியல என நொந்து போனான்.

காலை ட்யூட்டிக்கு கிளம்பியவனின் மனது நிலையில்லாம இருந்துச்சி.

இப்போ எல்லாம் மோனல் டீ போடுற லெவலுக்கு தேறிட்டா அதனால அவனுக்கு டீ அவதான் குடுப்பா.டீ எடுத்து வந்து அவனுக்கு குடுக்கவும் அவனது முகம் தெளிவில்லாமல இருந்துச்சு

மோனல் அவன் முகம் பார்த்து நின்றாள்.

ஆனால் அவன் ஏதோ சிந்தனையில் வெளியே போயிட்டான் இவளுக்குத்தான் மனசே சரியில்லாம காலேஜ் போனவள் மதியம் திரும்பி வரும்போது பார்த்தா வீடு திறந்திருந்தது.

தீதி இன்னும் போகலப்போல என நினைத்து உள்ளே வந்தவள் அவங்க இல்லையே என ரூமிற்கு வரவும் அவ்வளவு அதிர்ச்சி அழுகை ஓடிப்போயி ஜெபாகிட்ட கட்டிலில் உட்கார்ந்து அவனைப் பார்த்தாள் .

அவன் தலையில கட்டுபோட்டிருந்திச்சு

அவன் கையிலும் காலிலும் இருந்த சிராய்ப்புகளில் மருந்திட்டிருந்தது.

மோனல் அவன் காயத்தை தொட்டு தொட்டுப் பார்த்து அழுகை .அழுது கொண்டே கேட்டாள்

" என்னாச்சிது இவ்வளவு கட்டுப்போட்டிருக்காங்க,எப்படி அடிபட்டுச்சு"

ஜெபா" தெரிலம்மா எப்பவும் போற மாதிரித்தான்.எதிரே லாரி வந்துச்சு ட்ரைவர் சரியாகத்தான் ஓட்டுனாரு

என்னாச்சதுன்னு தெரில திடீர்னு சரிஞ்சிட்டு நான் இருந்த பக்கமா.நல்லநேரம் நான் கொஞ்சம் கவனமா இருந்தேன் "

மோனல் " தையல் போட்ருக்கா.எத்தன " என கேட்டுக் கொண்டே காயத்தின் மேல தடவிக்கொடுத்தாள்.

" எனக்குத்தான் ராசியே கிடையாது நா பாசமா இருந்தவங்களும் சரி என்மேல பாசமா இருந்தவங்களும் இப்போ இல்ல.

இப்போ உனக்கும் அடிபட்டாச்சி நா பிறந்தத நேரமே சரியில்ல "

புலம்ப ஆரம்பிச்சிட்டா அழுகை பைத்தியக்காரி மாதிரி சொன்னதே சொல்லிட்டு கைய உதறி உதறி அழுகை அவனுக்குமே பயந்தான்.

இது லேசான காயமில்ல கொலை முயற்சி பக்காவா அவனுக்காக போட்ட பிளான்தான் என கண்டுபிடித்துவிட்டான்.தலை காயத்துல ஐஞ்சு தையல் .

இதுக்கே பைத்தியக்காரி மாதிரி ஆயிட்டா. இதெல்லாம் சொன்னா அவ்வளவுதான் தாங்கமாட்டா என மறைத்தான்.

அவன்தான் இப்போ அதட்டினான்.

"சும்மா இருடி. ஒன்னுமில்லாததுக்கு ஏன் இவ்வளவு பண்ற இரண்டு நாள்ல சரியாயிடும். இப்பதான வந்த போ போயி சாப்பிடு போ என விரடட்டினான். எனக்கு தூக்கம் வருது " என கண்ணமூடினான்.

கொஞ்சநேரம் இருந்தவள் வெளியே போனாள். அவா போனதும் எட்டிப்பார்த்தான் சோர்ந்து வெளிய சோபாவில் உட்கார்ந்திருந்தா.

" ச்ச் ..டாலி இங்க வா " என அழைத்ததும்

அவசரமா ஓடி வந்தவள் அவன் பக்கத்தில் உட்கார்ந்து என்ன வேணும் வலிக்குதா எனக் கேட்கவும் அவனுக்கே பாவமா இருந்தது.நமக்கு இதெல்லாம் பழக்கந்தான்.இவா இப்படி பயப்படுறாளே என வேதனைப்பட்டான்.

ஜெபா" பசிக்குதுடி நீ வந்தா சாப்பிடலாம்னு இருந்தேன் எடுத்துட்டு வரியா இங்க "

மோனல் எழுந்து போயி ஒரு தட்டுல சாப்பாடு போட்டு எடுத்து வந்தாள்.

ஜெபா" ஊட்டி விடு " என வாயைத்திறந்தான்.

அவளும் ஊட்டிவிட இரண்டு வாய் வாங்கியவன் போதும் நீ சாப்பிடு என சொல்லிவிட்டான்.

அவள் சாப்பாட்டை வைத்து அப்படியே இருக்கவும் ஜெபா" டாலி சாப்பிடு சாப்பாட்டை அளஞ்சிட்டு இருக்காத "

பேருக்கு அவன் முன்னாடி கொஞ்சமா சாப்பிடவும் அது எங்க தொண்டைக்கு கீழ போகமாட்டுக்கு அப்படியே வைத்துவிட்டு கைகழுவி வந்தவள் அவன் மேல் கையபோட்டு பக்கத்தில் படுத்துக்கொண்டாள். அவள் அழறதுதான் அவனுக்கும் தெரியுமே மெதுவா அவள் தலையை வருடவும் தூங்கிவிட்டாள்.

நம்மள விட இவள கவனிக்கத்தான் ஆள் வேணும் பேல என யோசித்தவனின் தலை வின்வின்னென்று வலிக்க ஊருக்கு அழைத்து பேசினான்.காலையிலயும் பேசிருந்தான் இப்பவும் பேசிவிட்டு வைத்தான்.

சாயங்காலம் காலிங்க் பெல் சத்தம் கேட்கவும் மோனல் எழுந்து போயி பார்க்க தீதி வந்தாள் இரவு உணவு சமைக்க.

அவளை அழைத்தவன் கொஞ்சம் கூடுதலாக சமையல் செய்ய சொன்னான்.

ஜெபா" டாலி உன் டீ எங்க எனக்கு போட்டுத்தா போ "என விரட்டினான்.

கொஞ்ச நாளா சிரிப்போடு வீட்ட வளைய வந்தவள் இன்று பழையபடி அமைதியாகிட்டளே. அவளை மாற்ற முயற்சி செய்தான்.

டீ போட்டுக்குடுத்து அவனருகில் அமர்ந்தாள். திரும்பவும் காலிங்க் பெல் சத்தம் கேட்டு கதவைத்திறக்க அங்கு ஜெபாவின் அப்பா அம்மாவை காணவும் ஓடிப்போயி அனுராதவைக் கட்டிக்கொண்டாள். உள்ளே வந்தவர்கள் ஜெபாவைப் பார்த்ததும் பயந்திட்டனர்.

அவர்களுக்கும் இவன் ஒன்றும் சொல்லாமல் பார்க்கனும்போல இருக்கு என அழைத்திருந்தான்.

ஆனந்தராஜிக்கு தெரியும் எதாவது விசயம் இருக்கும் என்று. அவன் ரெம்ப தைரியமானவன் எட்டு வருசமா இந்த வேலையில இருக்கான்.இதுவரைக்கும் அவன் இப்படி சொன்னதே இல்ல.

எல்லா விசாரிப்பும் முடிந்தது உண்டு படுக்க சென்றுவிட்டனர்.

பாதி துக்கத்தில் எழும்பிய மோனல் அவன் தலைக்காயத்தை தடவி கையை தடவித் தடவி மெதுவா முத்தமிட்டாள்

எல்லாம் என்னாலதான் .எங்க அத்தை சொல்ற மாதிரி நான் பன்னோத்தி(ராசியில்லாதவள்) எப்பவும்

இப்படித்தான். என்ன கல்யாணம் பண்ணதுனாலதான் இப்படி ஆயிட்டு என முனுமுனுத்துக் கொண்டே அவனைத் தெட்டுதொட்டு பர்த்தாள்.

போலிஸ்காரன் அவள் தொடவுமே விழித்துவிட்டான்.எல்லாவற்றையும் கேட்டிருந்தவன் ஒரு நிலைக்கு மேல் தாங்காதவன் லேசாக அசையவும் படுத்துக்கொண்டாள்.

இப்படியாக நாட்கள் கடந்தது. ஒரு

வாரத்தில் அவனது தலைக்காயத்தின் தையல் பிரித்து வேலைக்கு சென்றான்.

அனுராதா அவளைத்தேற்றி காலேஜ்க்கு

இன்னும் ஒரு வாரம் கழித்து அவளை அனுப்பினார்.

அன்று மோனலை பார்த்து ஜெபா கவனமா போ சரியா என்ன விசயமாயிருந்தாலும் காலேஜ்ஜை விட்டு வெளிய வரக்கூடது என எச்சரித்தே அனுப்பினான்.

மாலை 6 மணியிருக்கும் மோனல் வேலை பார்க்கும் காலேஜ் முன் ஜெபா ஜீப்பில் தலையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.

மோனலைக் காணவில்லை எங்கு சென்றிருப்பாள் என்ற ஒரு இலக்கும் இல்லாமல் கண்கள் கலங்கி அமர்ந்திருந்தான்.

அத்தியாயம்-7

அன்று காலை வேலைக்கு செல்லும்போதே அவனுக்கு மனசுல தன்னால ஒரு பாரம் ஏறிட்டு.

அவன கொல்ல முயற்சி செய்திருக்காங்க எப்படி என்னனு விசாரிக்கனும் முதல்ல என எண்ணிக்கொண்டான்.

அதனால திரும்பி மோனல்கிட்ட கவனமா இரு என சொல்லிச் சென்றவன்.

அவனுடைய ஆஃபிசில் விசாரனை நடத்தினான். அவன் வண்டி டிரைவரை அழைத்து விசாரித்தான் அன்றைக்கு அவனுக்கு அடிபடும்போது பார்த்த லாரியின் நம்பர் கேட்டு. அவன் எழுதி வைத்திருந்த நம்பரைக் கொடுக்கவும்

ஆர்டிஓ ஆபிசுக்கு போன் செய்து விசரித்துக்கொண்டிருந்தான்.

லாரியின் சொந்தக்காரரின் விலாசம் கிடைத்ததும் விசாரிக்கத் தொடங்கினான்.

அங்க தொடங்கிய விசாரனை லாரி டிரைவரிடம் வந்து நின்றது அவன ரகசியமா வச்சு விசாரித்துக்கொண்டிருந்தான்.கைது பண்ணினா வெளிய தெரியும் என நினைத்தான்.

அந்த நேரம் அனுராதா அவனுக்கு அழைத்து மருமக வீட்டுக்கு வரைலைப்பா என தகவல் தெரிவித்தார்.

அப்போதுதான் மணியை பார்த்தான்

அது மூன்றைக் காட்டியது.

அப்போது தான் வயிறு என ஒன்று இருப்பதையே உணர்ந்தான். பசி சாப்பிட்டு வர்றேன் என கிளம்பியவன்

மோனலை அழைத்து செல்வோம் என வந்தான். அவனுக்குமே கொஞ்சம் டென்சன் தான்.

அவன் வேறு எதையும் சிந்திக்கல.

அங்கே சென்ற பிறகு கேட் கீப்பர்

மேடம் நேரமே போயிட்டாங்களே என சொல்லவும் அவளுக்கு பேன் பண்ணிட்டு வந்திருக்கலாம் என நினைத்தவன் தன் போலிஸ் மூளையை மனைவி விசயத்தில் உபயோகிக்க தவறினான்.

டிரைவரிடம் வீட்டிற்கு செல்ல சொல்லி உத்தரவு பிறப்பித்து கண்ணை மூடி காலையில் நடந்த விசாரனையின் சிந்தனையில் இருந்தான்.

வீடு வந்ததும் உள்ளே சென்றவன் கைகால் கழுவி சாப்பிட அமர்ந்து அனுராதவிடம் கேட்டான் உங்க மருமகள எங்க எனக் கேட்கவும்.

அனுராதா பதறி என்னடா என்கிட்ட

கேட்டுட்டு இருக்க. அவ வரலையே என்னனு உனக்குத்தான போன் போட்டுக்கேட்டேன்.இப்போ வந்து என்கிட்ட திருப்பி அதே கேள்விய கேட்டுட்டு இருக்க " அவரு பதட்டத்துலயும் கோபத்துலயும் கேள்வியைக் கேட்க அப்போதுதான் யோசித்தான்.

காலேஜ்ல நேரமே போயிட்டதா சொன்னானே டைம் கேட்கலையே.

எனத் தன் நெத்தியில்அடித்தவன்.

அவளது போனுக்கு அழைப்பு விடுக்கவும் அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

அவசரமா எழும்பினவன் ஆனந்தராஜை அழைத்து " ப்பா என்ன சொல்லனு தெரியல மோனல் இன்னும் வரல

என்னனு பார்த்திட்டு வர்றேன் அம்மாகிட்ட

சொல்லவேண்டாம் "

ஆனந்தராஜ்" எதுனாலும் பதட்டப்டாத.

நீ நிதானமா இரு. உன் வேலைக்கு அது நல்லதில்ல பார்த்துக்கோ. மருமக எங்கயும் போயிருக்க மாட்டா. நீ டென்சன் ஆகாத"

ஜெபா" சரி ப்பா " என சொல்லிச் சென்றவன் நேராக சென்றது அவள் வேலைப்பார்க்கும் கல்லூரிக்கு மறுபடியும் அவன் அங்கே செல்லவும் என்ன ஏது என கல்லூரி நிர்வாகி வரைக்கும் விசயம் சென்றது.

அவன் விசாரித்தான் எத்தனை மணிக்கு கல்லூரிக்குள் நுழைந்தாள் என்று கம்ப்யூட்டர் என்ட்ரியில் பார்த்தான் அது சரியாக 8 மணி காட்டியது.

வெளியே வந்த நேரம் பார்த்தவனுக்கு அதிர்ச்சி.காலை 11 மணிக்கு பஞ்சிங்க் செய்யப்பட்டிருந்தது.

எல்லோரையும் வர வைத்திருந்தான் அவனோட பதவி வர வைத்தது.

பிரின்சிபாலிடம் விசாரிக்கவும் அவர் சொன்னார் அவங்க சொந்தக்காரங்க வந்திருப்பதாக சொல்லி அனுமதி பெற்றுக்கொண்டே சென்றாள் என. அதற்கான ரெஜிஸ்டரிலும் அவள் கையெழுத்திட்டிருந்தாள்.

அவளுக்குத்தான் சொந்தக்காரங்க கிடையாதே.என நினைத்தவன்

அடுத்து மறுபடியும் கேட்கீப்பரிடம் விசாரித்தான்.

ஜெபா பதட்டப்படாம அமைதியா விசாரி எத்தனை கேஸ் பார்த்திருப்ப என மூளை சொன்னாலும் மனசு தனியல்லவா அது அவளை நினைத்து துடிப்பது அனிச்சைசெயலல்லவா.

கண்கள் சிவந்து அவ்வளவு உக்கிரமா இருந்தான்..

தன்னை சமன்படுத்திக்கொண்டு.

கேள்விகள் கேட்டான். அந்த சரக இன்ஸ்பெக்டர் வந்திருந்தார் எஸ்பி மனைவியக் காணவில்லை என்பது எவ்வளவு பெரிய விசயம்.

கடத்தல் எதுவும் இருக்குமா இல்ல அவளே எங்கயாவது போயிட்டாளா தெரியாத நிலைதான்.

விசிட்டர் வந்தா அது எழுதி வைக்கப்பட்டிருக்கும் என யோசித்தவன்

கேட் பாஸ் இல்லாம யாரும் உள்ளவரமுடியாது.கேட்கீப்பரிடம் கேட்டான்.யாரு பார்க்க வந்தா அப்படி என.

அவன் பதிலளித்தான் ஏற்கனவே பயன்படுத்திய கேட் பாஸ்தான் அது.

அதை வைத்து அங்கிருக்கும் பதிவேட்டின் உதவியுடன் எடுத்து பார்த்ததில் அது அவளது ஆச்சியின் பெயரில் இருந்தது.

அவங்க இறந்து ஒரு வருடம் ஆகிற்று அதனாலதான மோனலின் விருப்பமில்லாம கல்யாண ஏற்பாடு நடந்தது. என யோசித்தவனின் மூளையில் திடீரென மின்னல்.

அவர்கள் கல்யாணத்திற்கு முன்னாடியும் இவள இங்க வந்துதான கூட்டிட்டு போனதா சொன்னா.

அதே ரெக்கார்டில மீண்டும் அந்த தேதியிலான விசிட்டர் லிஸ்ட்டதான் பார்த்தான் அதே கேட்பாஸ் பயன்படுத்தியிருந்தது.

இப்போது உறுதி செய்தான். ஆனாலும் கலக்கம் எதுவும் பண்ணிருந்தாங்கன்னா சொத்துக்காக என்னவேணா செய்யக்கூடிவர்கள் அன்றைக்கே அவர்களை நிதானிக்க தவறினான்.

இப்போதுதான் அவனுக்கு இன்னும் கூடுதல் சந்தேகம் ஒருவேளை என்னையக் கொல்லவும் ஏவியது இவனுங்களா இருக்குமோ என நினைத்தவன்.

மோனலை எங்க கொண்டு போனார்கள் என தெரியவேண்டுமே. அந்த லாரி டிரைவரின் மேல் இப்போது கேஸ் ஃபைல் பண்ணிட்டான்.

போலிஸ் விசாரனை என்றால் என்ன என்று காண்பித்தார்கள். பின்ன கொலை முயற்சி அதுவும் எஸ்பியின் மீதே இப்போது அவரது மனைவியையும் காணவில்லை மொத்த டிபார்ட்மெண்டும்

அலர்ட் மோடில் இருந்தனர்.

விசாரனையில் லாரி டிரைவருக்கு ஒரு தொகை கொடுத்து செய்யச்சொன்னது அங்குள்ள பெரியபுள்ளி தாதா.

அவனது ஒட்டுமொத்த தொழிலையும் இவன் வந்து ஆறு மாதங்களில் முடக்கியிருந்தான். அதுவும் இல்லாமல் அவனின் பெயரை என்கவுண்டர் குண்டாஸ் லிஸ்டிலும் இருந்தது. அதனால்தான் ஜெபாவைக் கொல்ல ஏற்பாடு செய்திருந்தான்.

இரவு எட்டு மணி இருக்கும் அந்த காலேஜ் முன்பாக ஜீப்பை நிறுத்தி

" எங்கடிப்போன கவனமா இருன்னு சொல்லித்தான டாலி அனுப்பினேன் " தூரத்து இருட்டை வெறித்திருந்தான்.

பாரம் தாங்காமல் தலையில் கைவைத்து பைத்தியக்காரன் போல அமர்ந்திருந்தான்.

மும்பை போலிஸுக்கு தகவல் ஏற்கனவே

பறந்திருந்தது. புனே முழுவதும் எல்லாயிடத்துலயும் தகவல் சென்றது.

சொந்தங்களிடம் மட்டுமே அவன் சிறிது இளகுவான். தனது டிபார்ட்மண்ட்டில் அவனுக்கு பெயர் வேறு அக்னி.

குற்றம்புரிபவனை பொசுக்கிறுவான் நெருப்பைபோல.

எவ்வளவு நேரம் அப்படி இருந்தான் என்று தெரியாது. மும்பை போலிஸிடமிருந்து அழைப்பு வந்தது. தகவல் இதுதான் மோனலின் சொந்தங்களை ரகசியமாக கண்கானித்து அத்தை பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் மோனல் அவர்களிடம் சிக்கியிருக்கிறாளா என தகவல் கேட்டிருந்தான்.

அந்த தகவல் வந்திருந்தது. அது கிடைத்ததும் சிங்கம் பிடறியை சிலுப்பி எழுவது போல எழுந்தவன் இப்போது அரக்ககுணத்தில் இருந்தான்.

ஜீப்பில் ஏறியவன் வண்டியை மும்பைக்கு செல்ல கட்டளையிட்டான்.இன்னும் பச்சத்தண்ணி குடிக்கல தாகம் பசி உடலின் எந்த இயற்கை நிகழ்வும் அவனுக்கு தோணவே இல்லை.

எப்படி இவ்வளவு அசால்ட்டா இருந்திட்டேன். அவனுங்க என் மனைவியக் கடத்துறளவுக்கு போயிருக்காங்க கையில் கிடைத்தால் துவம்சம் பண்ணிருவேன் என உருமிக்கொண்டான்.

மோனலை நினைத்து வருந்தினான்.

சும்மாவே பயப்படுவா.எந்த சூழ்நிலையில வச்சிருக்கானுங்களோ மனம் தன்னாக பதறியது.

எல்லா சோர்வும் தாண்டி அவளை எப்படியாவது மீட்கனும் மீட்கனும் என வெறியோடு டிரைவரை விரட்டிக்கொண்டிருந்தவன். எல்லா இடத்திற்கும் கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தான்.

வேகம் வேகம் காற்றின் வேகமாக மும்பை வந்து சேர்ந்தவன் முதலாவதாக சென்றது மோனலின் அத்தை வீட்டிற்குத்தான்.

அங்கு ஒருவரும் இல்லை.மும்பை போலிஸும் அவனுக்கு துணையாக இருந்தனர்.

நெக்ஸ்ட் என்ன எங்கபோயிருப்பாங்க.

கண்ணாமூச்சி காட்டுறானுங்கலே என இன்னும் துரிதப்படுத்தினான் இரவு இரண்டு மணி இருக்கும் அவனின் அப்பா அழைத்திருந்தார் எடுத்து பேசினான்

" இல்லப்பா இன்னும் கிடைக்கல.தேடிட்டு இருக்கோம் அம்மாவிற்கு சொல்லவேண்டாம்.

எப்படியாவது சமாளிங்க " என போனை வைக்கப் போனவனின் போனில் ஒரு பிளாஷ் வர என்னவென்று பார்க்க எம்ப்டி மெசேஜ்.நம்பர் புதுசு ,பரிட்சையமான நம்பர் போல இல்லையே. எமெர்ஜென்ஸி கண்ட்ரோலுக்கு அழைத்து அந்த நம்பரை ட்ராக் பண்ண சொன்னான்.

அவனுக்கு கிடைத்த பதில் அந்த நம்பர் இப்போ மூவிங்க்ல இருக்கு என வரவும் உறுதி செய்தவன்.

அது எங்கபோகுதோ அந்த லைன்லயே போலிஸை பாலோ பண்ண சொன்னான் ஒரு, ஒரு மணி நேரத்தில் மும்பையின் வெளிப்பக்கம் இருக்க கூடிய காட்டுப்பகுதியுடன் சேர்ந்த மக்கள் வசிக்கும் இடம்.

போலிஸ் சுற்றி வளைத்திருந்தது மூன்று மணிக்குமேல் இருக்கும் ஜெபா அங்கு செல்லவும் அவனுக்குமே தெரியாது மோனல் இங்க வச்சிருக்காங்களா இல்லையா அப்படியே இருந்தாலும் அவளுக்கு ஆபத்து இல்லாமல் மீட்கனும் நெஞ்செமெல்லாம் அதே சிந்தனை ஒருவழியாக இருந்த இடத்தினை அடைந்து கவனித்து கதவை பலமாக தட்ட அதற்குள் இருந்து எந்த சத்தமும் வரவில்லை.

சிறிது நேரம் கழித்து ஒருவன் மெதுவாக

வெளியே எட்டிப்பார்க்க இது போதுமாக இருந்தது அவனோடு சேர்ந்து கொஞ்சம் போலிஸும் ஜெபாவும் தள்ளிக்கொண்டு

உள்ளே செல்ல அங்கு கார்த்திக்கேயன் இருக்கவும் அவனை போலிஸார் பிடித்துக்கொள்ள ஜெபா மோனலைத்தேட அவள் அரை மயக்கத்தில் குற்றுயீராய் அங்கு கைகால் கட்டப்பட்டு கிடந்தாள்.

இதைப்பார்த்தவனின் நெஞ்சமே உறைந்துப்போயிட்டு.அவளின் கட்டுகளை அவிழ்த்து அவளை கைகளில் தூக்கிக் கொண்டவன் கார்த்திக்கேயனை பார்த்து

கர்ஜித்தான் " உன்ன உயிரோட விடுவேன்னு கனவுலக்கூட நினைக்காத

இவளை சரியாக்கிட்டு உன்கிட்ட வர்றேன் இரு "எப்படி வெளிய வந்தான் எப்போ ஹாஸ்பிட்டல்ல சேர்த்தான் என எதுவுமே அவனுக்கு நியாபகம் இல்லை.

அவளின் இரு கரத்திலும் ட்ரிப்ஸ் மருந்திற்கான ஊசிகள் குத்தி ஐசியூவில் இருந்தாள்.

டாக்டர் சொன்னது மயக்கமருந்து நிறைய பயன்படுத்தியிருப்பாங்க போல

சீக்கிரம் கொண்டுவந்தது நல்லது எனவும் எப்படியும் இரண்டு நாள் ஆகும் நார்மலாக என சொல்லிவிட்டனர்.

வெளியே இருந்தவன் அவன் அப்பாவிற்கு அழைத்து எல்லா விசயத்தையும் சென்னவன். நான் அங்க வந்து அம்மாகிட்ட பேசிக்குறேன்பா என பேசி வைத்துவிட்டான்.

அந்த ஏரியா இன்பெக்டர் வந்து இவனிடம் ஆலோசனைக் கேட்டுக்கொண்டிருந்தனர் கேஸ் எப்படி போட என்ன எனவும்.

மோனலைக் கடத்த உதவியதே அந்த புனேயில் உள்ள அந்த தாதா என தகவல் கிடைத்ததும். அவங்கூட சேர்த்து கார்திக்கேயனின் பெயரையும் எழுத சொல்லிவிட்டான்.

எங்கவந்து அதுவும் யாருவீட்ல கைய வச்சிருக்கான். அவன் வாழ்நாள்ல மறக்கவேகூடாதுபடி செய்யிறேன் என

நினைத்தவன் மோனல் விழிக்கும் வரை பொருமையாகவே இருந்தான்.

வெறும் டீயும் சிகரட்டும் மட்டுமே இரு நாளில் உணவாகிப்போனது அவனுக்கு.

இரண்டு நாள் கழித்து மோனல் மெதுவாக கண் திறக்கவுந்தான் அவனுக்கு உயிரே வந்தது.

ஏற்கனவே நார்மல் வார்டுக்கு மாற்றிருந்தனர்.அவள் அருகே அமர்ந்திருந்தவன் அவள் விழித்ததும் கையை பற்றிக்கொண்டான். நான் இருக்கிறேன் என்று அவள் சிரிக்க முயல அதற்கு நேரெதிர் அவள் கண்களிலும் , அவன் கண்களிலும் கண்ணீர்.

மௌனமே அங்கு மொழியாகிப்போனது

இருவருக்குமே பேசகேட்க நிறைய இருந்துச்சு ஆனா எதுவும பேசவில்லை.

ஜெபா எழுந்தவன் அங்கிருந்த நர்சை அழைத்து விவரம் சொல்லி டாக்டரை பார்க்க சென்றான்.

அடுத்த இரண்டு மணிநேரத்தில் ஜெபாவும் மோனலும் அவனின் வண்டியில் ட்ரைவர் ஓட்டா ஜெபா பின்பக்கம் தன் மடியில் மோனலை கிடத்தியிருந்தான். வழியில எங்கயும் நிறுத்தவேண்டாம் என கூறியிருந்தான் பாதுகாப்பில்லை என. வீடு வந்து சேரும் போது இரவாகிவிட்டது.

கண்விழித்ததும் போலிஸ் முறைமையின் படி அவளின் வாக்குமூலம் எல்லாம் வாங்க இன்ஸ்பெக்ட்டரே வந்திருந்தார் அவள் சொல்ல சொல்ல அவனுக்குத்தான் அங்கு இருக்க முடியவில்லை கோபம் ஒருபக்கம் அவள் எவ்வளவு வேதனைப்பட்டாள் என்பதையெல்லாம் கேட்கும்போது அந்த கார்த்திக்கேயனை கொல்லனும்போல வெறியே வந்துச்சு

எல்லாம் முடித்துதான் கிளம்பினர் அங்கிருந்து .

ஒருவழியாக வீடு வந்து சேர்ந்ததும்தான்

ஆசுவாசம் வந்தது இருவருக்கும்.

இவர்கள் வருவதற்கு முன்பே அனுராதா ஜெயராஜை ஒரு வழியாக்கியிருந்தார் பிள்ளைங்க எங்க போயிருக்காங்க என்ன ஏது என்று. இப்போ மோனலை பார்த்ததும் பதறி அழுதேவிட்டார் ஜெபாவத்தான் கேட்டார் என்னடா இது பிள்ளைய இப்படி கூட்டிட்டு வந்திருக்க என கேட்டு சண்டையிட்டு வீட்டை ஒருவழியாக்கியிருந்தார்.

மோனலை அழைத்து அவளுக்கு வெந்நீர் போட்டு குளிக்க வைத்து இப்போது சாப்பாடு ஊட்டிவிட்டுக்கொண்டிருந்தார்.

யாருக்குமே எதுவும் பேசத்தோணவில்லை அவளுக்கு எதாவது ஆகிருந்தா என்னாவாகிருக்கம் இதே சிந்தனைதான் நான்கு பேருக்கும்.

உயிரோடவாது விட்டானுங்களே பாவிப்பசங்க எனதான் எண்ணினர்.

அனுராதா ஜெபாவைப்பார்க்க அவனுமே ஒன்றும் சாப்பிட்டிருக்க மாட்டான் என எண்ணியவர் மோனலுக்கு ஊட்டும்போது அவனுக்கும் ஊட்ட ஆரம்பித்தார் பசி அவனுக்கும் அப்போதுதான் உணர்ந்தான் மோனலும் அவனைத்தான் பார்த்தள் பசியில அவசர அவசரமாக வாயைத்திறந்து உணவை வாங்கிக்கொண்டிருந்தான்.

ஆனந்தராஜ் " ஜெபா ஊருக்கு டிக்கட் போடு நம்ம நாலுபேருக்கும், போவோம்.

இங்க இனி நீங்க இருக்கவேண்டாம் .

லீவ் போடு அப்படியே வேற ஊருக்கு மாற்றலுக்கு யாருக்கிட்டயாவது பேசு "

குடும்பத்தின் மூத்தவராக பிள்ளைகளின் நலனுக்காக சில முடிவுகள் எடுத்தார்.

சாப்பிட்டு முடித்து மோனலை படுக்க சொன்னவன். வெளியே பால்கனிக்கு சென்று நின்றுக்கொண்டான்.

சிறிது நேரம் பார்த்திருந்தவள் அவனை காணவில்லை எனவும் வெளியே வற அங்கு அவன் கையில் சிகரட்டோடு நின்றிருந்தான். அந்த இருட்டை வெறித்துக்கொண்டே .

சிறிது நேரங்கழித்து திரும்பி, அங்கே நின்றிருந்தவளை பார்த்தவன் சிகரட்டை காட்டி இந்த ஒன்னு மட்டும் இன்னைக்கு ரெம்ப தேவைப்படுது ப்ளிஸ் டாலி என சொல்லவும் ஓடிச்சென்று அவனைக் கட்டிக்கொண்டாள் .

அத்தியாயம்-8

மோனல் அவன் முகத்தை பார்க்கவும் அவன் " தூங்கு, ரெஸ்ட் எடு " என அவளை படுக்க சொல்லவும்.

அவள் வேண்டும் என்றே அவன் நெஞ்சில் ஏறிப்படுத்துக்கொண்டாள்.

" ச்ச்ச்.டயர்டா இருக்கு " என விலகி படுத்தான்.

அவளுக்கு முகமே மாறிட்டு. அப்படியே அமைதியாக திரும்பி படுத்தாள்.

அழுகை வரும்போல இருந்தது அவளுக்கு.

சிறிது நேரங்கழித்து அவன் பேசினான்

" இவ்வளவு நடந்த பிறகும் எதுக்குடி அந்த பொம்பள மேல கேஸ் போட விடல. உன்னோட சொந்தக்காரங்கனா விட்ருவியா. உனக்கு எதுவும் ஆகியிருந்தா எப்படினு யோசிச்சி பாரு "இப்போது எழும்பி உட்கார்ந்திருந்தான்.

அவனுக்கு கோபம் வருத்தம் சொந்த அத்தை பசங்க இப்படி பண்ணுவாங்களா. அதுவும் அவளை சீரழிக்க நினைத்தது கோபம். அந்த மெசேஜ் மட்டும் வரலன்னா கண்டுபிடிக்க லேட்டாகியிருக்கும்.

அதுக்குள்ளாக எதுவும் செய்திருந்தாங்கன்னா என்ன பண்ண முடியும்.

அவ எப்படி வந்தாலும் நான் ஏத்துப்பேன்.கொன்று பொட்டிருந்தாங்கன்னா நினைக்கவே நெஞ்செல்லாம் வலி கைகாள் பதறியது அவனுக்கு.

எல்லாத்தையும் விடு என்ன நினைச்சிப் பார்த்தியா. நீ எப்படி இருக்க என்ன சூழ்நிலையின்னு தெரியாமா. பச்சதண்ணி கூட தொண்டைக்கு கீழ இறங்கல.

வலிக்குது இங்க என நெஞ்சைத் தொட்டுக் காட்டினான்.

அவங்க உனக்கு இரத்த சொந்தம். அவங்கள பார்த்ததும் இரண்டு மாசத்துக்கு முன்னாடி தாலிகட்டினவன் நான் உனக்கு எப்படி நியாபகத்திற்கு வந்திருப்பேன்.

கையில போன் இருக்கே இப்படி அத்தை வந்திருக்காங்கனாவது ஒரு மெசேஜ் அனுப்பிருக்கலாம்"

அவளும் எழும்பி உட்கார்ந்து பேசாம அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவன் தொடர்ந்தான் " என்கூட வாழபிடிக்கமாதான் என்னமோ செய்திட்டியோனு பயந்தேன் "

பக்கத்துல இருந்த தலையனை எடுத்து

அவனை அடிப்பின்னிட்டா.

அப்படியே தலையணை கீழப்போட்டு கையால் தன் முகத்தை மூடி அழ ஆரம்பித்தாள்.

இப்போ இப்படி பேசலன்னா நாளைக்கு வேற எதாவது கிறுக்குத்தனம் செய்து வைப்பா என அமைதியாஇருந்தான்.

மரியாதை எல்லாம் காத்துல பறந்திட்டு.

" நீயா இருக்கப்போயிதான் தாலிக்கட்ட விட்டேன் வேற யாரும்னா செத்துப்போயிருப்பேன்.உன்ன இவ்வளவு நாள் காதலிச்சதுனாலதான் இங்க உயிரோட உட்கார்ந்த்திட்டிருக்கேன் இல்லனா எப்போவோ போயி சேர்ந்திருப்பேன்.

என்ன நடந்ததுன்னு கேட்காம நீ பாட்டுக்கு பேசிட்டே போற " என பேசியவள் கட்டிலில் இருந்து இறங்க முற்பட அவளை பிடித்து கட்டிலில் தள்ளியிருந்தான்." எங்கடி போற இப்போதான் படாதபாடு பட்டு மீட்டிருக்கு. லூசு மாதிரி பண்ணாத படு இங்க "என திமிறியவளை அவள் மேல சாய்ந்து அடக்கினான்.

அவள் கண்ணீரை துடைத்துவிட்டவன்

அவளைத் தன் கையணைப்பில் வைத்துக்கொண்டான்.

சிறிது நேரம் கழித்து தெளிந்தவள்.

பேசினாள்" காலையில கிளாஸ் எடுத்திட்டிருந்தவளை அட்டெண்டர் அழைத்து உங்களுக்கு விசிட்டர் வந்திருக்காங்க என சொல்லவும்.

யாரு எனக்கேட்டாள் அதற்கு அவன்

" உங்க அத்தைன்னு சொன்னாங்க " என சொல்லிச்சென்றான்.

அத்தைனு ஞாபகத்திற்கு வந்தது அனுராதாதான். அவங்க தான் வந்திட்டாங்க என சென்றவள் கண்டது

நாயகியை.

அவள் எதிர்ப்பார்க்கவேயில்லை சட்டுனு சுதாரித்தவள் திரும்பி போகப்போக " தாயி உன்ன பார்க்கத்தான் வந்தேன் கொஞ்சம் பேசனும் "

மோனல்" என்ன பேசனும் .உங்கிட்ட பேசறளவுக்கு நீங்க எனக்கு யாருமே இல்ல "

நாயகி"எப்படி தாயி இப்படி பேசுற என்ன இருந்தாலும் நீ என் தம்பி பொண்ணு "

அவள் கண்டுக்கவே இல்ல திரும்பி நடக்கவும் நாயகியின் இரண்டாவது மகன் " என்ன போலிஸ்காரன் உயிரோட இருக்கற தைரியமோ. ஒரு தடவ தப்பிச்சிட்டான் அடுத்த தடவை மிஸ்ஸே ஆகாது பாரு. எகத்தளாமா உனக்கு நின்னு பேசமாட்டியோ " என எகிறினான்.

அதைக்கேட்டதும் தான் அப்படியே திரும்பி அவனிடம் ஓடி வந்து என்ன சொல்லறீங்க நீங்க என பதறிக்கேட்க

" நாங்க போட்ட ஸ்கெட்ச்தான்

தப்பிட்டான். சோலிய முடிக்கத்தான் சொன்னோம் அந்த ட்ரைவர் மடப்பய பயந்திட்டான். இல்லனா இந்த நேரத்திற்கு காரியந்தான் நடந்திருக்கும் உன் புருசனுக்கு. மறுபடியும் மாட்டாமலா போவான் பார்த்துக்கலாம் "

அப்படியே கால்கள் வேறோடி அந்த இடத்துலயே நின்றுவிட்டாள். என் குடும்பத்து மூலமாத்தான் அவருக்கு ஆபத்தா என கலங்கி பதறினாள்.

மோனலுக்கு இவங்க குண்டாயிசம் தெரிஞ்சளவுக்கு தனது கணவனின் தைரியமும் பதவியை பற்றியும் அவ்வளவு தெரியல.

" அப்படிலாம் ஒன்னும் செஞ்சிறாதிங்க உங்களுக்கு என்ன வேணும் என கேட்டாள் "

அவன் நாயகியிடம்" நம்மகிட்ட எப்படி ஊமைச்சி மாதிரி அமைதியா இருந்தா இப்போ பாரு போலிஸ்காரன் நல்ல ட்ரைனிங்க் குடுத்திருக்கான் பாரு பேசறதுக்கு. என நாயகியிடம் பேசியவன் "

இவளிடம் திரும்பி " எங்களுக்கு உன் போருல இருக்க சொத்த மாத்திக்குடு உன் புருசன ஒன்னும் செய்ய மாட்டோம் "

மோனல் " சரி மாத்தி தர்றேன் எனக்கு அந்த சொத்து வேண்டாம் அவங்கள எதுவும் செய்யக்கூடாது. மொத்த சொத்தையும் நீங்களே வச்சிக்கோங்க "

அவன் " பாருடா புருசன் மேல பாசத்தை "

சரிவா கையெழுத்துப் போட்டுக்குடு என சொல்லவும்.

தலையைத்தவள் வீட்டிற்கு போனா பரவாயில்லை எனத்தோணியதும் .

பிரின்சிபாலிடம் சென்று அனுமதி வாங்கி வந்தவள். நாயகியிடம் வந்து எங்க கையெழுத்துப்போடனும் சொல்லுங்க நான் போடுறேன். அதுக்காக அவர ஒன்னும் பண்ண வேண்டாம் இவங்க கிட்ட சொல்லுங்க " என்றாள்.

நாயகி " அது வெளிய வண்டியில இருக்குமா கையெழுத்து போடு வா என அழைத்து சென்றவர் அங்கே அவர்களது பெரிய மகன் அந்த கார்த்திக்கேயனும் இருக்க சிறிது தயங்கியவள் அவளது அத்தையை பார்த்தாள் "

நாயகி " அந்த எழுதி வச்ச பத்திரமெல்லாம் தாங்கடா அவா கையெழுத்துப்போடுவா என சொல்லி முடிக்கறதிற்குள்ளாக மோனலின் முகத்தில் துணிபோல ஒன்றை அழுத்தவும் அவள் மயங்கி சரிந்தாள் "

நாயகி பதறி என்னக் காரியம்டா பண்றீங்க கையெழுத்து வாங்கனும்னு தானடா என்னக் கூட்டிவந்திங்க. இப்போ இதெல்லாம் என்னடா எனக்கேட்டு சண்டையும் போட்டார்.

அதற்குள் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தனர்.

நாயகி சத்தம்போட்டுக் கொண்டே வர

" இருமகன்களும் அவரை மிரட்டினர். இங்க இருக்க ஒரு பெரிய தாதாவின் துணையோடுதான் பண்றோம் நீ ஒன்னும் பயப்படதா. சும்மா சத்தம் போடாம இருங்க என்று அதட்டி வைத்தனர்."

மும்பை வந்து அவர்கள் வீடென்றால் பிரச்சனை எனத்தெரியும் அதனால

மோனலின் வீடு அதாவது அவளின் ஆச்சி தாத்தாவின் வீடு உண்டு

அங்கு கொண்டு சென்றனர் மோனலை.

நாயகிக்கு மகன்களின் செயலில் பிடித்தமில்லை சொத்துக்காகன்னு சொன்னானுங்க இப்போ இப்படி பண்றானுங்களே என பயம் அவருக்கு.

என்ன இருந்தாலும் மோனல் சொந்த தம்பியின் மகளல்லவா.

அவன்களுக்கு புனேயிலிருந்து தகவல் வந்து கொண்டேயிருந்தது.இரவு வரை மோனல் விழிக்கவேயில்லை.

நாயகித்தான் மெதுவாக மகன்களுக்கு தெரியாமல் தண்ணீர் வைத்து கண்களை துடைத்து முகத்தை துடைத்து அவளை தட்டி எழுப்பினார்.

மெதுவாக கண்களை திறந்த மோனல் பயந்து அழத்தொடங்க அவர்தான் மோனலின் வாயை மூடி மெதுவாக" உன் மச்சான்க வெளியதான் இருக்கானுங்க. சத்தம்போட்டுறாத என அவரது செல்போனை குடுத்து உன் மாப்பிள்ளைக்கு போன் பண்ணி சொல்லிறு தாயி. இவனுங்க என்ன செய்யப்போறானுங்களோ எனக்கு பயமாயிருக்கு என சொல்லவும்.

கால் பண்ணமுடியாது எனத் தெரிந்து மெசேஜ் டைப் செய்ய முடியாமல் எம்டி மெசேஜ் அனுப்பினாள். அதற்குள் அவனுங்க வரவும் செல்போனை தன் ட்ரஸில் மறைத்தாள். அதுதான் அவளைக் காப்பாற்றியது.

அவசர அவசரமாக வந்தவர்கள் அவள் மறுபடியும் விழித்துவிட்டதை அறிந்து இதுவும் நல்லதுதான் கார்வரைக்கும் நடந்துவா என அவளை இழுத்துச் சென்றனர்.

நாயகியிடம் போலிஸ் தேடிவருது நாங்க இவளை இடமாத்தூறோம். நீ காட்டிக்குடுத்துறாத என எச்சரித்தகருந்தனர்.

காரில் ஏறியதுதான் தெரியும் என்ன என யோசிக்கும் முன்பே மயங்கச்செய்திருந்தனர்.நாயகியின் செல்போன் அவளின் ட்ரசுக்குள்.

" அத்தைக்கு சொத்துமேல ஆசை உண்டு ஆனா கொலை செய்யறளவு அவங்களுக்கு தைரியம் கிடையாது. ப்ளீஸ் அவங்களாலத்தான் நான் இப்போ உங்ககிட்ட இருக்கேன். அவங்கள மட்டும் விட்ருங்க. "

" சரி என்றான்,அவங்க கொடுத்த செல்போன்.அதனாலத்தான் ஜெபாவால் மோனலை ஆபத்திலிருந்து மீட்க முடிந்தது.அவளின் முதுகை தடவி அவளை சமாதானப்படுத்தினான்.

மோனல்"உங்கள பார்கனும்னுதான் நினைச்சேன்.அப்புறம் முழிச்சிப்பார்த்தா நீங்க என் பக்கத்துல இருந்தீங்க.

அப்போதான் உங்கள ரெம்ப மிஸ் பண்ணேன்.உங்கள விட்டு போகனும்னு நினைக்கல.

ஆறுவருசத்துக்கு மேலா உங்களத்தான் லவ் பண்றேன்.நீங்க என்ன கல்யாணம் பண்ணலாக்கூட நான் அப்படியேதான் இருந்திருப்பேன் " என்கவும் அவளை அவனுக்குள் புதைய இறுக கட்டிப்பிடித்திருந்தான்.

" மச்சான் ரெம்ப மூச்சு முட்டுது "

ஜெபா" ஹான் என்ன சொன்ன "என அவளை விடுவித்தான்.

மோனல் " ஒன்னும் சொல்லலயே ...."

"ஓய் டாலி இங்கப்பாரு.என அவள் முகத்தை நிமிர்த்த அவள் தன் கண்களை மூடி எதிர்பார்ப்போடு இருந்தாள். சிறிது நேரம் பார்த்திருந்தவன் ஒன்றும் செய்யாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

அவள்தான் கண்ணைத்திறந்து பார்த்து அவன் அமைதியாக இருக்கவும் அவனை நெருங்கிச்சென்று அவனது உதடுகளை தன் இதழ் கொண்டு ஒத்தடம் கொடுத்தாள்.

இப்பவும் அவன் அசையாமல் இருக்க அவனது உதடுகளை தன் வாய்க்குள் அடக்கியிருந்தாள்.அவனது காயங்கள் பெருசு அதை சரிசெய்ய முயன்றவள் அவன் கண்களை நோக்கியிருக்க அவனும் அவள் கண்களுக்குள் தனக்கான காதலை தேடிக்கொண்டிருந்தான்.

அவளது செயல் எப்போது அவனது செயலாக மாறிற்றோ அவன் அவளது முகமெங்கும் எச்சில் முத்தம் பதித்தான்.

தன் நாவினால் அவள் கழுத்தை வருட கிறங்கிப்போயி துவண்டாள்.

ஜெபா அவளை லேசாக விலக்கி மயக்கமருந்து எபக்ட் கொஞ்சம் இருக்கும் ரெம்ப பலவினமா இருக்க படுத்து தூங்கு என சொல்ல.

மோனல்" எனக்கு தூக்கம் வரல கண்ணமூடினா ஒரு மாதிரி இருக்கு

பேசிட்டிருப்போமா "

ஜெபா " சரி என்ன பேச .நீ உன் காதல் கதைய சொல்லு நான் என் காதல் கதைய சொல்றேன் என்ன டீலா எனக்கேட்க"

அவளும் தலையதலைய ஆட்டினாள் .

சொல்லத் தொடங்கினாள். எம்.ஈ காலேஜ்ல சேர்ந்த முதல் நாள்ல இருந்து நானும் உங்க தங்கச்சியும் பிரண்ட்ஸ்.

அவ லவ்வுக்குத்தான் ஒரு வில்லன் இருந்தாரா. அந்த வில்லன பத்தி பேசிப்பேசியே எனக்கு அவர பிடிச்சிப்போச்சிது.அவர பார்த்ததே இல்ல"

" யாரு அது வில்லன் ".

மோனல் இப்போ சத்தமா சிரிச்சா.

அவள் வாயை முடியவன் மெதுவா சிரிடி.

பக்கத்து ரூமுக்கு கேட்கும் நீ சிரிக்கறது. என்னடி இது மூனு நாளுல இப்படி மாறிட்ட.

சிரிப்பை அடக்கியவள் " அவனை கைகாட்டி நீங்கதான அவ லவ்விற்கு வில்லன்.மறந்து போச்சா எல்லாம் "என்று இன்னும் சிரிக்கவும்.

அவன் உனக்கு நான் வில்லனா தெரிஞ்சனா.அடிப்பாவி என் தங்கச்சி வாழ்க்கை நல்லாயிருக்கனும்னு செய்தேன்டி. அதுக்குபேரு வில்லத்தனமா.

மோனல்" அது எங்களுக்கும் தெரியும் ஒரு நாள்கூட உங்க தங்கச்சி உங்கள தப்பா சொன்னதே இல்லை.அதனாலதான் உங்க மேல கொஞ்சூண்டு ஆசை வந்திச்சித்தெரியுமா.

இரண்டு வருசம் முடிஞ்சி அவ ஊருக்கு வரும்போது நான் உங்க வீட்டிற்கு வரதான் இரண்டுபேரும் பிளான் பண்ணோம் எனக்குத்தான் வரமுடியாம போச்சிது.

ஜெபா" ச்ச்.நீ அப்பவே வந்திருந்தா கல்யாணம் முடிஞ்சி இப்போ என் பிள்ளை ஸ்கூல் போயிருக்கும். மிஸ்ஸாகிட்டே"

" ஐய ஆசைப்பாரு பிள்ள ஸ்கூலுக்கு போயிருக்குமாக்கும்"

ஜெபா" ஆசை ரெம்ப தாண்டி விட்டா இப்பவே என் ஆசை எவ்வளவு என காமிச்சிருவேன் பாக்குறியா " என அவளை நெருங்கி கடித்து வைத்தான்.

" விடுங்க வலிக்குது கதை சொல்லனுமா

வேண்டாமா"

" சரி சரி சொல்லு "

அப்புறம் பார்த்தா அவளும் இங்கயே என்கூட வேலைக்கு வந்திட்டா .

அதுக்குள்ளதான் மாசமாயிட்டலே.

அவளோட போன்லதான் பார்த்தேன் உங்க போட்டோவை ரெம்ப பிடிச்சது

அப்புறமா.அனிஷாகிட்ட சொன்னதில்லை.

ஜெபா" நீ லேசா இன்டிக்கேட் பண்ணிருந்தாலே அவ கண்டுபிடிச்சி நம்ம கல்யாணாத்தையே நல்லபடியா நடத்தி வச்சிருப்பா.நீ ரெம்ப ஸ்லோ..போடி"

"யாரு நான் ஸ்லோ.அப்போ போலிஸ்காரர் எப்படி ரெம்ப ஸ்பீடோ.

நத்தை வேகம் அப்படித்தான"

"டாலிக்கு என்னமோ தெரிஞ்சிருக்கே என்ன அது"

மோனல்" ஐயா இங்க வந்த நாளுல இருந்து என் பின்னாடி சுத்துனது தெரியும்.ஓளிஞ்சி ஒளிஞ்சி பார்த்திட்டு பேசாம போனதும் தெரியும் "

ஜெபா"அடக் கிராதகி என்ன அப்போ சுத்தல்ல விட்ருக்க அப்படித்தான "

மோனல்" அப்படியில்ல அது வேற ஒரு காரணம். நான் உங்களுக்கு வேண்டாம் என நினைச்சித்தான் ஒதுங்கிப்போனேன் "

உங்கள பிடிக்கும் ஆனா உங்க வேலை அது எனக்கு பிடிக்காது. அது மட்டுமில்ல உங்களுக்கு நான் சரியா இருக்கமாட்டேன்னு தோணும் .சிலசமயம் உங்களுக்கும் என்ன பிடிக்குமா எனத்தோணும். நானே மனசுக்குள்ள வச்சிக்கிட்டேன்.

முதல் தடவை நேர்ல பார்த்தப்போம் இமைமூடாம பார்த்தேனா நீங்கதான் அதட்டினீங்களே அழுகை வந்திடுச்சி.

பார்த்த அன்னைக்கே அழ வச்சிட்டீங்க"

என வருத்தப்பட்டாள்.

ஜெபா" அதுக்கு அப்புறம் உன்ன மட்டுந்தான பார்த்தேன் "

மோனல் " அதனாலதான் மீ எஸ்கேப் ஆனேன். அத்தை தான் இந்த நல்லவரு என்ன விசாரணை பார்வை பார்க்கதா நினைச்சு காமெடிபண்ணாங்க.

சிரித்தாள் "

ஜெபா அப்பவே என்னவச்சி காமெடி பண்ணிருக்க என சிரித்தான்.

அப்படியே அவளின் இதழ் பற்றி

அதனின் சுவையறிய முற்பட்டான்.

அவள் தன் கண்களை மூடி அவனது செய்கையில் திளைத்திருந்தாள்.

சிறிது நேரத்தில் விடுவித்தவன்" டாலி "

" ம்ம்ம் "

" நம்ம ஊருக்கு போயிட்டு அப்படியே ஹனிமூன் போகலாமா "

சிறிது வெட்கத்தேடே" சரி "

" அங்க வந்து முத்தத்தோடலாம் நிறுத்த மாட்டேன் பரவாயில்லையா " என விசமக்கேள்வி கேட்டான்.

அதை சொன்னதும் அவனின் பரந்த மார்பில் தன் முகத்தை மறைத்துக்கொண்டாள்.

அத்தியாயம்-9

அடுத்த நாள் எல்லோரும் கிளம்பி ஊருக்கு சென்றாகிவிட்டது.

அங்கப்போனதும் ரெஸ்ட் எடுத்திட்டு

குடும்பத்தோடு நேரம் செலவிட்டனர்.

அவன் ஏற்கனவே பிளான் செய்திட்டு தான் வந்திருந்தான். அதுக்காகதான் இந்த லீவே.

எடுத்த காரியத்தை முடிக்கலைன்னா அது ஜெபா இல்லையே அதனாலதான்

அவன் மனசு கொஞ்சம் சமன்பட்டது.

அதற்காகவே எல்லாத்தையும் விட்டுக் குடும்பத்தோடு இப்போது சந்தோசமாக ஒன்ற முடிந்தது.

அவனின் மனைவியை தன்னிடமிருந்து பிரிக்க நினைத்தது மட்டுமல்ல. அந்த கார்த்திக்கேயனுக்கு மோனலை அடைய வேண்டும் அதுதான் அவனது வெறி இனியும் அவனை சும்மா விட்டு வைத்தால் நான் என்ன ஆம்பிள்ளை.

மோனல் இருந்த நிலை இப்போதும் அவன் கண் முன்னில். சிலபல வேலைகள் செய்துவிட்டே வந்திருந்தான்.

அவனது அண்ணன் ஜீவா கேட்டான்

" ஒரு வார லீவ் கிடச்சிருக்கே. எங்கயாவது மோனலைக் கூட்டிகிட்டு போயிட்டு வாயேன் "

ஜெபா " அது தான் பிளான் செய்துருக்கேன்."

ஜீவா " மோனல் நீ தமிழ்நாட்டிற்கு வந்திருக்கியா சுத்தி பார்க்க. இதுக்கு முன்னாடி எல்லாம் "

மோனல் " இல்ல நான் தமிழ் நாட்டிற்கு வந்ததே இல்ல. கல்யாணம் முடிஞ்சிதான் முதல் முதலா இங்க வந்தேன்.என்னோட சொந்த ஊரு திருநெல்வேலி மாவட்டம் ஆனா எங்கன்னு தெரியாது இங்க கூட்டிட்டு வர யாருமில்ல."

ஜீவா" ஊட்டி, கொடைக்கனல் இல்லனா சென்னைப்போ "

ஜெபா மெதுவாக மோனலின் காதில் பேசினான். எதோ நம்ம இடம் சுத்தி பார்க்க போறமாதிரியே பேசுறான் பாரு.

மோனல் சிரிக்க.

ஜீவா " டேய் அவ கதுல என்ன சொல்ற இங்க பேசு "

"இல்ல நீ அண்ணிய கூட்டிட்டு ஹனிமூன் ட்ரிப் எங்க போன"

" சிம்லா "

ஜெபா " அங்க போயி எத்தனை நாள் எங்கெல்லாம் சத்திபார்த்த .அண்ணி நீங்க சொல்லுங்க "

சுனிதா " ஜெபா நீங்க சொல்ல வர்றது புரியுது என்ன ஆள விடுங்க.உங்க அண்ணாகிட்டயே பேசிக்கோங்க "

ஜீவா ஜெபா சொல்லவருவதை புரிந்துக்கொண்டு சிரித்தான்

ஜெபா " நா எதாவது ஹில் ஸ்டேசன் போயிக்கிறேன் தகவல் பார்த்திட்டு சொல்றேன் " என ரூமிற்குள் சென்றுவிட்டான்.

சிறிது நேரங்கழித்து மோனல் அவர்கள் அறைக்குசெல்லவும். அவக்கிட்டக்கேட்டான்

" உனக்கு எங்கயாவது போகனும்னு ஆசை இருக்கா டாலி "

மோனல்" இப்போதைக்கு இல்ல.எனக்கு இடங்களே சரியாகத் தெரியாது.நா எப்படி ஆசைப்பட "

சரி விடு நம்ம என்ன அங்கப்போயி ஊரா சத்திப்பார்க்க போறோம். நா உன்னை சுத்தப்போறேன்,நீ என்ன சுத்தப்போற. இதுக்கு எதுக்கு பணத்தை வேஸ்ட் பண்ணிக்கிட்டு .அப்படித்தான டாலி எனக்கேட்கும்போதே தலையை குனிந்துக்கொண்டாள்.

அவள் முகமெல்லாம் இரத்தமாக மாறியது.வெட்கம் அவளை ஆட்கொண்டது.

காலையில வந்ததுல இருந்து மாமியார் பின்னாடியே சுத்துறா. இப்போதான் அவன் கையில சிக்கியிருக்காவிடுவானா அவன்.

" ஓய் டாலி ,என்ன அமைதியாகிட்ட

ம்ம்ம் "என கிட்ட வந்து அவளை கைகைளில் தூக்கி கொண்டான்.

அவள்தான் ஒன்றும் பேசாமல் அவனை பார்ப்பதை தவிர்த்து வேறு பக்கம் திரும்பினால். அவளை கட்டிலில் இறக்கி அவளின் அருகில்படுத்துக்கொண்டான்

அவள் இறங்க முடியாமல் "

" காலையில் பிளைட்ல பக்கத்துல உட்கார்ந்திருந்தது, இப்போ இராத்திரி ஏழு மணி இவ்வளவு நேரமாகிருக்கு நீ என் பக்கத்துல வரதுக்கு.

என்ன சுத்துறதுக்கு பதிலா இரண்டு மாமியாரையும் சுத்துற. இப்படி போன என் ஆசை நிறைவேறாதுடி"

" என்ன ஆசை "

" நேத்துதானடி சொன்னேன் என் பிள்ளைய ஸ்கூலுக்கு அனுப்புற ஆசைய "

" என்ன? பிள்ளையே இல்ல எப்படி ஸ்கூலுக்கு அனுப்புவீங்க "

" அட மக்கு டாலி. அதுக்குதானடி உன்ன இங்க பக்கத்துல படுக்க வச்சிருக்கேன். ரெடி பண்ண நீ வேணும்.வா நம்ம அந்த வேலைய பார்ப்போம் "

மோனல் " ஹான் "லேசாக வாயைத்திறக்க அவளிதழைக் கவ்விக் கொண்டான்.

அவள் தன் கண்களை விரித்து பார்க்க தன் புருவம் இரண்டையும் ஏற்றி என்ன எனக்கேட்டு கண்களை மூடி மயங்கினான்.

அவளும் கிறங்கி அவன் உடலோடு ஒன்றினாள். ஆரம்ப அச்சாரத்தை ஆழமா கொடுத்தான். அவள் உடல் தோய்வதினால் லேசாக விடுவித்தவன்

மீண்டும் தன் உதட்டின் ஈரத்தை அவள் கன்னங்களில் இறக்கினான்.

இளந்தாமரை உடல் இப்போது ரோஜாவின் நிறமாக மாறியது.

அவளிள் தேகத்தை மறைத்த ஆடை அவன் கைகளின் முயற்சியால் விடுபட்டு ஆதரவற்று கிடந்தது.

அரைகுறை ஆடையில் தன் கைகளை ஆடையாக மாற்ற முயற்சி செய்ய

விடுவானா அவன் தீரன் அல்லவா.

கூச்சம் வெட்கம் இரண்டும் போட்டிபோட

அவனை பார்க்க முடியாதபடி அவனுடலுடன் ஒன்றினாள்.

" டாலி "

"ம்ம்ம்"

" கஷ்டமா இருந்தாலோ.

பிடிக்கலைனாலோ சொல்லிடனும் எனக்காக பொருத்து போகக்கூடாது சரியா"

" ம்ம் " எனத் தலையாட்ட மட்டுமே முடிஞ்சது. காரணம் கடத்தி சென்ற அந்நாளில் உணர்ந்தாள் அவனின்றி அவளால் உயிர்வாழ முடியாது.ஜெபாவே அவளின் உயிர்மூச்சு என தெரிந்துக்கொண்டாள்.

அதனாலயே அவளது மனதும் இப்போது இடங்குடுத்தது. அவளுடல் அவள் வசமில்லை அவனின் உயிரின் தேடலைத் தொடங்கியிருந்தான்.

அவளது தாமரை அங்கங்களில் தன் நாவினால் தேன் குடிக்கும் வண்டாக உருமாறினான்.

அவன் கைகள் அவள் காதுகளை வருடி பின்

கன்னங்களை தொட்டு அப்படியே கீழிறங்க

மங்கையவள் கைகளால் தடுக்க அவள் முகம் பார்த்து தன் கண்களால் யாசித்தான் எனக்கு வேண்டுமென. அவள் தலையசைக்க மீண்டும் முயற்சிக்க அவனின் கைகளின் பிடிவாதம் ஜெயித்தது.

அவன் கைகள் அவளின் ஆடையில்லா உடலில் ஊர்லம் போயின. அவன் ஒவ்வொரு தீண்டலிலும்

அவளின் உடல் துடித்து உயிர்த்தது.

கெஞ்சியும் மிஞ்சியும் குழைந்தும் அவர்களின் காதல் கலையை தொடர்ந்தனர்.

அவனுடலில் அவள் பாந்தமாக பொருந்திக்கொண்டாள்.

அவளின் பெண்மை இந்த தீரனின் வலிமைய தாங்கமால் துவள தலைகோதி சரிசெய்தான்.

ஒரு கட்டத்தில் பயந்து மிரள முத்தமிட்டு முத்தமிட்டு மெதுவாக அவளைக் கையாண்டவன் கூடலின் இனிமையை அவளுக்கும் உணர்த்தி தானும் எடுத்துக் கொண்டான்.

காவல்காரன் காதலனாக அவனைக் களவாடிக்கொண்டான்.

இருவரின் உயிரின் தேடல் முடிவில் மோனல் தான் அயர்ந்து போனாள். காவலனவன் அவள் மீதானக் காதலையும் ஆசையையும் தன் உடல் கொண்டு அவளுடலில் எழுதியிருந்தான். எல்லாம் முடிந்து களைத்து விலகி அவளைப் பார்க்க அவளுக்கோ இப்போது பித்தின் நிலை.

அவளை தன் மேலே சாய்த்து தட்டிக் கொடுத்தான். அவள் முடிக்கோதி அவள் கன்னம் தடவி " டாலி வலிக்குதா "

" இல்லை என அவன் மார்பில் தன் இதழால் ஒற்றினாள் "

அவனுக்குமே பயமா இருந்தது.

எதுவும் பழைய மாதிரி ஆகிடுமோ என.

அவளக் கஷ்டபடுத்திட்டமோ என. அதுதான் கேட்டான் அவளது மொழியற்ற சம்மதத்தில் நிறைவாக உணர்ந்தான்.

இப்போது தன் நிலையுணர்ந்து ட்ரஸைத் தேடினாள்.அவன் சம்மா இருடி நாமக்குள்ள என்ன சும்மா படு.

அய்யோ அத்தை உங்கள சாப்பிட கூட்டிட்டுவரச்சொன்னாங்க.

தேடிருப்பாங்க என தலையில் கைவைக்க.

" அம்மா ஒன்னும் தேடிருக்க மாட்டாங்க ஆனாலும் இதை எப்போ சொல்லறா.

மச்சான் பெர்ஃபாமன்ஸ்ல மயங்கிட்டனு சொல்லு "

அவர்களின் இன்பமான சூழ்நிலைத் தொடர்ந்தது. மோனல் பசிக்குதுன்னு சொல்லும் வரை நீடித்தது.

டைனிங்க் டேபில்ல உட்காரும்போது மணி ஒன்று. சாப்பாட்டை ஒரு தட்டில் எடுத்து அவளுக்கும் அவன் ஊட்டியே விட்டான்.

சாப்பிட்டு முடித்து அறைக்குள் வரவும்

அவனது மொபைல் போனிற்கு வரிசையாக மெசேஜ் வந்துக் கொண்டிருந்தது எடுத்து பர்த்தவனின் முகம் தீவிரமாக இருந்தது.

அதைப்பார்த்த மோனல் என்னாச்சி என பதற்றமானாள். அவளின் பயத்தைக் கண்டு ஒன்றுமில்லை என சொன்னவன் இரு கொஞ்சம் பேசிட்டு வர்றேன் என சென்றுவிட்டான்.

ஒரு மணி நேரம் சென்றுதான் வந்தான் அவனின் முகத்தில் அப்படியொரு சாந்தம் இப்பொழுது.

அவள் மறுபடியும் பயந்து தூங்காமல் இருந்தாள் வந்து பார்த்தவன் ஏய் டாலி முழிச்சிட்டா இருக்க தூங்கிருக்க வேண்டியதுதான.

அவள் முகம் பயத்தை காமிக்க. ஒன்னுமில்லடி டிபார்ட்மண்ட்ல இருந்துதான் பேசினாங்க. நீ ஏன் இவ்வளவு கலவரமாகுற வா தூங்கவோம் என அவளையும் இழுத்து படுக்கையில் தள்ளியவன் தூங்க முற்பட

அவள்தான் அவள் கையை சுரண்டினாள்.

" என்னடி இப்படி கூப்பிடுற அப்பறம் சேதாரத்துக்கு மச்சான் பொறுப்பு கிடையாது பார்த்துக்க " என்று சொல்லி சிரிக்கவும்.அவள் தான் உங்க கையில படுக்கட்டுமா என கேட்க.

" அட லூசு பொண்டாட்டி இதெல்லாம் கேட்டா செய்வாங்க வா " என தனது கைகளின் வளைவில் படுக்க வைக்கவும் உணர்ந்தான் அவள் உடம்பு ஊதறியதை சட்டென்று எழும்பியவன் என்னடா என கேட்கவும்

" நீங்க ஏன் கோபமா போனீங்க மறுபடியும் அவனுங்க பிரச்சனை பண்றாங்களா " என கேட்கவும் கண்ணீர்

வந்தது.

ஜெபா" இல்லம்மா இது வேற. நான் இருக்கற வேலை அப்படி அதுக்காக நான் என்ன கோழையா.அவனுங்களால என்ன பண்ண முடியும் ஒன்னும் செய்ய முடியாது என்ன நம்பு சரியா தூங்கு "

அவளை மெதுவாக தட்டிக்கொடுத்தான்

எப்போ தூங்கினாள் எனத் தெரியாது.

அவளை கட்டிலில் தூக்கம் கலையாமல் கிடத்திவிட்டு மறுபடியும் போன் எடுத்து மேல சென்றவன் யாருக்கோ அழைத்து பேசிவிட்டு வந்தவன் மனைவியைத்தான்

பார்த்திருந்தான். அப்படியே அவனும் உறங்கிப்போனான்..

அடுத்தநாள் காலை இருவரும் நல்ல உறக்கத்தில் மோனல்தான் வெளிய சத்தம் கேட்டு எழும்பியவள் அங்கே பார்க்க கனவன் நல்ல உறக்கத்தில்.

மெதுவாக எழும்பியவள் குளிக்க அப்போதுதான் பார்த்தாள் அவள் உடலில் சில பகுதியில் பல்தடம் இரத்தம்கன்றிய சிவப்பு தண்ணீரினால் அழுத்தி தேய்த்தால் அது இன்னும் சிவப்பாகிற்று.

குளித்து முடித்து வெளியே வந்தவள்

உடைமாற்றவும் திரும்பி பார்த்தாள் அவன் அசைவது தெரிந்தது.

வெளியே செல்லும்போது மணி பத்து

சிறிது பயத்துடன்தான் சென்றாள் யாரும் எதுவும் சொல்லுவாங்களோ என.

அங்க நடந்த்ததோ வேறு " இவ்வளவு நேரம் சாப்பிடமா என்ன தூக்கம் சாப்பிட்டாவது போயி தூங்கலாம்.

அந்த தடியன எழுப்பு இல்லனா இன்னும் தூங்கிட்டிருப்பான். கல்யாணம் முடிஞ்சி பொண்டாட்டி வந்தாச்சி இன்னும் பொறுப்பு வருதா பாரு நம்மள நம்பி வந்திருக்கானு. அவன் பட்டினியா தூங்குவான் உன்னையும் அப்படி பழக்குறான் பாரு போ அவன எழுப்பு வரலன்னா நீ வந்து சாப்பிடு " என அனுராதா சொல்லிக்கொண்டிருந்தார்.

ஒரு குடும்பத்தை கைக்குள் பாதுகாத்து வைத்திருக்கும் பெண்ணிற்கு தெரியாதா

மருமகள் ஏன் நேரங்கழித்து வர்றா என அவர் புரிந்துக்கொண்டு அவளை அனுப்பி வைத்தார்.

மோனல் சென்று அவனை எழுப்பவும் மெதுவாக கண் திறந்தவன் " டாலி என்ன இவ்வளவு பிரஷ்ஷா மச்சான் பக்கத்துல வந்திருக்க என அவளை வாசம்பிடிக்க வர. தள்ளி விட்டு அழுக்கு பையன் போயி குளிச்சிட்டு வாங்க பசிக்குது சாப்பிடலாம். நீங்க வரலன்னா அத்தை என்னைய சாப்பிட சொன்னாங்க போயி சாப்பிட்டுறுவேன் உங்களுக்காகதான் பசியோட இருக்கேன் "

அவன் எழும்பி குளித்து வந்ததும்,இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவனின் அண்ணி சுனிதா அங்கு வந்து " தம்பி , உங்க அண்ணா உங்களுக்கு இதைக் தரச்சொன்னாங்க " என ஒரு கவரை அவன் கையில் குடுத்தாள்.

ஜெபா "என்னது அண்ணி இது " என அந்த கவரை பிரித்தான் அது அவர்களின் ஹனிமூன் ட்ரிப்பிற்கான எல்லாம் அதிலிருந்தது ஆச்சார்யம்.

பாருடா டாக்டர் நிறைய யோசிச்சி ஏற்பாடு பண்ணிருக்கான்.

என தன் அண்ணனுக்கு உடனே அழைத்து நன்றி சொன்னான்.

அன்று மாலை பயணநேரம். அதனால

அவசர அவசரம சாப்பிட்டு கிளம்பினர்

வெளியே அவளுக்கு தேவையான பொருட்கள் வாங்க என பைக்கில் சென்றனர் அதுதானே அவனுக்கு விருப்பம்.

திரும்பி வீட்டிற்கு வந்து ஹனிமூன் பயணமாக மூனாறுக்கு பஸ்ஸில் பயணம் இருவரும் நெருக்கமாக அருகருகே அமர்ந்து ஏகாந்தமான சூழலில் பயணம் அது தரும் இதம் அலாதியல்லவா. ஒருவரை ஒருவர் அறிந்துக்கொள்ள துடிக்கும் இந்த இளமைக்கு ஏற்ற பயணம்.

அங்கே சென்று இறங்கியதும் குளிர் புதுமணத்தம்பதிகளுக்கேற்ற குளிர்

மோனல் அவனை ஒட்டியே நடந்தாள் அவனுக்கு தனி காட்டேஜ் மாதிரியான வில்லாக்கள். சமையல் பண்றதுல இருந்து எல்லாமே இருக்கும்.

சாப்பாடு வேண்டும் என்றாலும் அங்கே சொல்லிவிட்டாள் எல்லாம் வந்திடும். ரூமிற்கே வெளியே போக வேண்டிய அவசியமே இருக்காது.

அங்க வந்து சேர்ந்த பிறகுதான் தெரியும் அவனுக்கே ஆச்சர்யம் அவ்வளவு ரசனையான இடம். செம்ம பிளேஸ் இல்ல என சொன்னவன்.

வீட்டுக்கு அழைத்து வந்து சேர்ந்துவிட்ட தகவலை சென்னவன்.

அவளை அழைத்து உள்ளே சென்று கட்டிலில் விழுந்தவன் அப்படியே அசையாமல் இருந்தான்.

மோனல்தான் " மச்சான் என்னாச்சி இப்படி படுத்திட்டீங்க.பிரஷ்ஷப் ஆகுங்க பஸ்ல வந்தது."

இப்போது சரிஞ்சி படுத்தவன் என்ன செய்யனும் குளிக்கனுமா,சரி குளிக்கலாமே டாலி இங்க வா " என அழைத்து கிட்டவந்தவளை அப்படியே அவனோடு கட்டிலில் சரித்தவன் " மொத்தமா சேர்த்து குளிச்சிக்கலாம்

அவனது வேலைய அவளிடம் ஆரம்பிக்க

வரவர போலிஸ் மாதிரியே இல்ல திருடன் மாதிரி பண்றீங்க என சினுங்கியவளின் இதழ்களை தன் விரல்களால் பிடித்து இழுத்து " பொண்டாட்டிய கொள்ளையடிக்கறது தான்டி இந்த புருஷனோட வேலை.

அப்பறம் திருடன் மாதிரித்தான்

நடந்துப்பேன் என சொல்லி சிரிக்கவும்

அவளுக்குத்தான் அவன் பார்வை வெட்கத்தையும் மயக்கத்தையும் ஒரு சேர தரவும் எழப்போனவளை மறுபடியும் இழுத்து தன்மேல் போட்டுக் கொண்டான்.

" மச்சான் "

ஜெபா" அப்படியே கூப்பிடுடி செம கிக்கா இருக்கு.இப்படியே யாருமில்லா இடத்துல உன்கூட வாழ்ந்து சுகித்து அப்படியே

செத்துபோயிடனும் "

டப் என்ற சத்தம் அவன் அப்படி சொல்லவே அவன் வாயில் ஒரு அடிக் குடுத்திருந்தாள்

"இப்பதான் வாழவே ஆரம்பிச்சிருக்கு அதுக்குள்ள செத்து போயிடனும்

சொல்றீங்க "

பார்டா டாலிக்கு கோவத்தை என சிரித்தவன் அவளை தன் வசமாக்ககி கொண்டான்.

தன் உதடு கொண்டு பெண்ணவளின்

உணர்வுகளை திறக்க அவள் அவனின்

இன்ப பெட்டகமாக மாறிப்போனாள்.

அவள் அங்கங்கள் அவனை பித்துக்கொள்ள வைக்க முடிவிலா தொடர்ந்தான் தன் தேடலை அவளிடம்.

அவளின் நிலையோ கனவன் அவன் ஒவ்வொரு செய்கையிலும் தவிர்த்து தவித்து அவனுள் அடங்கி அவனை தனக்குள் அடக்கினாள்.

மாலைமயக்கும் நேரம் மோனல் எழுந்தவள் குளித்து ரெடியாகி டீவியை

உயிர்பித்து மாற்றிக் கொண்டிருந்தவள்

ஓரிடத்தில் ஐயோ என் வாயில் கைவைத்தவள்.

அவசரமாக ஜெபாவை எழுப்பினாள்.

மச்சான் எழும்புங்க இந்த செய்திய பாருங்க என அழுதுகொண்டே அவனை எழுப்பினாள்.

அத்தியாயம்-10

மோனல் எழுப்பவும் என்னடி இது தூங்குறவன எழுப்புற டயர்டா இருக்குடி .

மறுபடியும் எழுப்பினாள் சிறிது அழுகையோடே. என்னனு டீவியை பார்க்கவும். அங்க புனேயின் முக்கிய செய்தியாக மராட்டிய சேனல் ஒன்றில்

வந்த செய்தி. அதைக் கைகாட்டினாள்.

எனக்கு மராட்டி தெரியாதுடி.நீ படிச்சி சொல்லு இல்ல அவன் வாசிக்றத மொழிமாற்றி தமிழ்ல சொல்லு.

அவள் அந்த அழுகையோடு முறைத்து

பார்க்கவும் செய்தி இதுதான்.

புனேயின் போதைப்பொருள்,மற்றும் பெண்கள் கடத்தல் வழக்குகளில் முக்கிய குற்றவாளியாகிய தாதாவும் அவனோட கூட்டாளியான மும்பை நகரைச்சேர்ந்த தமிழ் இளைஞரான கார்த்திக்கேயனும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக கொண்டு செல்லும் வழியில் தப்பி செல்ல முயன்றதால் போலிஸாரால்

சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஓ இதுவா நீ வேறெதுக்கோ அழுறயோன்னு நினைச்சேன் என மறுபடியும் தூங்க போகலானான்.

அவன பிடிச்சி நிறுத்திய மோனல்

" நீங்க ஏதேச்சையா இந்த செய்தி எடுத்துக்கறத பார்த்தா உங்களுக்கு முன்பே தெரியுமா இது "

ஜெபா " நான்தானடி அங்க எஸ்பி எனக்கு தெரியாம எப்படி. "

மோனல் " ஐயோ,கொலைகாரா கொலைகாரா. தப்பு பண்ணினா இப்படித்தான் கொல்லுவியா. அவனுக்கு

வேற தண்டனை வாங்கி கொடுத்திருக்கலாம். உயிரோட அருமைத்தெரியுமா உனக்கு ."

இவள் இப்படி பேசுவா எனத் தெரியாத ஜெபா வாயப்பிளந்து பார்த்திட்டிருந்தான் (பொண்டாட்டி பேச்சை ரசிக்கான் வேற ஒன்னுமில்லை)

கட்டிலில் தலையை சாய்த்து அழுகை அப்படி அழுதா.

அவள் தலையை தடவிக்கொடுக்கவும் தட்டி விடடாள்

" வேற ஏதாவது பண்ணிருக்கலாமே .

இப்படி கொன்னூட்டீங்களே பாவம். "

ஜெபாவிற்கு இப்போ கோவம் சுள்ளுனு ஏறியது " பைத்தியமாடி நீ அவன் என்ன செய்தான்னு தெரியாம பேசாத. "

மோனல் " சொத்து வேணும்னு என்ன கடத்திட்டாங்க. ஒரு தடவை தெரியாம பண்ணிட்டாங்க. அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா பாவம்

நீங்க கொலைகாரன்தான்"

ஜெபா கோபத்தில் எழுந்தவன் அவளை பிடிச்சி நிறுத்தி " நான் உனக்கு கொலைகாரனா. அப்போ அவனுங்க என்ன கொல்ல வந்தானுங்க அதுக்கு என்ன சொல்லுவ. ஏது ஏது என்ன கொன்றுந்தா நீ சந்தோசப்பட்டிருப்பா போல .

உன்ன கடத்துனதுக்காக மட்டுமில்ல . அவன் எத்தனை பெண்களை கடத்தி என்ன பண்ணிருக்காங்க என தெரியுமா.

எதுவுமே தெரியாம மண்ணு மாதிரி இருந்திட்டு என்ன கொலைகாரன்னு சொல்ற "

மோனல் அவனின் கோபம் கண்டு பயந்தவள் பேச்சை நிறுத்தி அழுதுக்கொண்டிருந்தாள்.

திரும்பவும் பேசினான்" உன் அருமை நொத்தை மவன் பெண்ணுங்களை கடத்தி ரேப் பண்ணிட்டு வித்திடுவான்

அந்த மாதிரி தொழில் பண்றவங்க கிட்ட. வாழ்நாள் முழுதும் அந்தப் பொண்ணுங்க நிலமைய நினைச்சிப்பாரு. "

இப்போது அதிர்ச்சியில் வாயில் கைவைத்துக் கேட்டுக்கொண்டிருந்தாள் .

செமக்கோவம் அவனுக்கு எப்படி என்ன கொலைகாரன்னு சொன்னா

" நான் மட்டும் அன்னைக்கு சரியான நேரத்துல வரலன்னா என் பொண்டாட்டி அவங்கள்ல ஒருத்தி ஆகிருப்பா. ஒரு போலிஸ்காரனா என்னோட வேலையத்தான் நான் செஞ்சேன். அதுக்கு உன்கிட்ட இருந்து ரெம்ப நல்லபேரு கிடச்சிட்டுமா ரெம்ப சந்தோசம்." கடைசி வரி சொல்லும்போது அவனின் வருத்தம் வெளிப்பட்டது.

சட்டைய எடுத்துப்போட்டு வெளியே கிளம்பி போயிட்டான். அழுது கொண்டிருந்தவள் அதைக் கவனித்தாலும் தடுக்கும் என்ன மற்றவளாக இருந்தாள்.அவளோட எண்ணம் இதுதான் என்ன தப்பு பண்ணினாலும் எப்படி அவங்கள கொன்னாங்க அப்படி யோசித்தவள்.

இப்போது அவன் சொன்ன நியாயங்களில் சிறிது தெளிந்தவள் அமைதியாக இருந்தாள். இரண்டு உயிர்களை ஒரே நேரத்தில் இழந்து தவித்தவள் அல்லவா. அவளைப்பொருத்தவரை உயிரின் விலை அறிந்தவள் ஆயிற்றே.

அப்படியே நேரங்கடக்கவும் பயந்துதான் போனாள்.மணி இப்போது இரவு ஒரு மணி அவளுக்கு பசி அதைவிடவும் கனவனைக் கணவில்லையே அது ஒரு பக்கம் அப்படியே அமர்ந்து இருந்தவளுக்கு பயம் எதுவும் ஆகிருக்குமோ என திரும்பவும் அழுகைய ஆரம்பிக்க அவளின் மொபைலை தேடி அவனுக்கு அழைக்கவும் தான் , அழைப்பு சத்தம் வெளியே கேட்கவும் போயி பார்க்க வெளியே உள்ள திவானில் படுத்திருந்தான்.

மெதுவா போயி அவன் பக்கத்தில் ஒட்டிப் படுத்துக்கொண்டாள்.

அவன் அசையாமல் படுத்திருந்தான்

அவனது இடுப்பில் கைப்போட்டு படுக்க

சட்டென எழும்பினவன் அவளைத்தான் பார்த்தான்.

" கொலைக்காரன் கூட படுக்க வேண்டாம். நாளைக்கு காலையில உங்களக்கொண்டு உங்க குடும்பத்தோட கொண்டு விட்டுரேன். இந்த கொலைக்காரனும் உனக்கு வேண்டாம் என் குடும்பமும் உனக்கு வேண்டாம்.

நாளைக்கு பிளைட்டு காலையில மும்பைக்கு. உன் குடும்பத்தோடு போயி சேர்ந்துக்கோ. பாதியில வந்தவன் பாதியில போயிடுறேன். " என்று பேசியவன் அப்படியே உள்ளே சென்று

படுத்துக்கொண்டான்.

அவன் பேசியது அவளுக்கு அதிர்ச்சி அப்படியே உறைந்து நின்றுவிட்டாள்.

உணர்வு வந்து அவனைத்தேட அவன் அங்கு இல்லை. மறுபடியும் வெளிய போயிட்டாங்களா என எண்ணியவள் அறையின் கதவு திறந்திருக்கவும் அவனை படுக்கையில் கண்டவள் நிம்மதியாகி அவன் பக்கத்தில் சென்று மெதுவாக படுத்துக்கொண்டாள்.

அறையில் நன்கு வெளிச்சம் பரவியதை உணர்ந்து ஜெபாதான் எழும்பினான் அவள் இன்னும் தூக்கத்தில் .

பசி வயித்தை கிள்ளியது எழுந்து பிரஷ்ஷப் ஆகி வந்தவன் அங்கியிருந்தே சாப்பாட்டிற்கு சொன்னவன் அமர்ந்து அவளைத்தான் பார்த்துகொண்டிருந்தான்.

அவளிடமிருந்து அப்படி ஒரு எதிர்வினைய எதிர்பார்க்கல அதனால அவள் பேசியது அதிர்ச்சி அதைவிடக்கோபம் என்ன வார்த்தை சொல்லிட்டா..

சாப்பாடு வரவும் தனியா சாப்பிட மனசே இல்லாம அவளை எழுப்பினான்

" டாலி "

அவளிடமிருந்து எந்த அசைவும் இல்லை, திரும்பவும் அழைத்தான்.

" டாலி "

அருகில் வந்து அவளைத்தொட்டு எழுப்பவும் தான் உணர்ந்தான் அவளது உடல் சூட்டினை காய்ச்சல் அப்படி கொதித்தது.

அவசரமாக காட்டேஜ் நம்பருக்கு அழைத்து டாக்டர் வரச்சொல்லிருந்தான்.

டாக்டர் வந்து பார்த்திட்டு ஒன்னுமில்லை வைரல் ஃபீவர்தான் என

மருந்து மாத்திரைகள் கொடுத்து சென்றுவிட்டார்.

அவளை எழுப்பி முகங்கழுவி வரச்சொல்லி சாப்பாடு தட்டுல கொடுத்தான் தட்டை வாங்கியவளின்

கையும் லேசாக நடுங்கியது காய்ச்சலின் விளைவாக. அவள் சாப்பிடாமல் இருக்கவும் அதை வாங்கி அவளுக்கு ஊட்டினான்.

அவள் கண்களில் கண்ணீர் மாலை மாலையாக வந்துக்கொண்டிருந்தது.

ஜெபா " இப்போ ஊட்டவா வேண்டாம் "

இறுகிய குரலில் கேட்கவும் உடனே கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

அவளுக்கு மாத்திரைக் கொடுத்துவிட்டு

அவளை படுக்கையில் விட்டவன், அவனுக்குமே பசி அதனால் சாப்பிட்டு

முடித்து வரதுக்குள்ளாக அவள் மாத்திரையின் வீரியத்தில் அசந்து தூங்கிவிட்டாள்.

ஊருக்கு அழைத்து விவரத்தை சொன்னான் அவளுக்கு காய்ச்சல் உடம்பு சரியில்லை என அவர்களும் கிளம்பி வரச்சொல்லியாகிட்டு.

அவள் நல்ல தூக்கத்தில் அவளருகே படுத்தவனுக்கு ஒன்னுமே ஓடவில்லை.

சிந்தனையிலயே அந்த நாளை ஓட்டினான். அடிக்கடி அவள் உடல் உஷ்ணத்தை பார்த்தான் காய்ச்சல் குறையவும்.

அன்றிரவே அங்கிருந்து கிளம்பி வீடு வந்து சேர்ந்தனர். குடும்பத்தில் அனைவரும் நினைத்தது மோனலுக்கு உடம்பு சரியில்லாமல் திரும்பி வந்துவிட்டனர் என. இவர்களின் ஊமை நாடகம் யாருக்கும் தெரியாது.

இரண்டு நாள் கழித்து ஜெபாவிற்கு புனேயியிலிருந்து அழைப்பு வந்திருந்தது என்கவுண்டர் சம்பந்தமான விசாரனைக்காக.

உடனே கிளம்பியவன் அனுராதவை அழைத்தான் அவரிடம் விசயத்தை சொல்லி " உங்க மருமக இங்க இருக்கட்டும் அங்க வேண்டாம் எப்படியும் எனக்கு அங்கயிருந்த மாற்றல் இருக்கும் . அதனால இப்போதைக்கு வேண்டாம் எதுனாலும் அங்க போயிட்டு சொல்றேன் " என கூறி அவசரமாக சென்றுவிட்டான்.

அவளிடம் போயிட்டு வர்றேன் என ஒரு தலையசைப்புக் கூட இல்லை. எல்லாரின் முன்னாடியும் ஒன்னும் கேட்கவும் முடியாது .

அவன் சென்றதும் அறைக்குள் சென்று அவனுக்கு போனில் அழைப்பு விடுக்க

அவன் அதை எடுக்கவே இல்லை.

ஒன்னுமே புரியவேயில்லை அவளுக்கு.

ஏன் இப்படி பண்றாங்க எனத் தோன்றியது. அது வேற அன்றைக்கு உன் குடும்பத்தோட போ என சொன்னவன்

அனுப்பாம இருந்ததே பரவாயில்லை என மனம் லேசா சமாதனாக அங்கு இருந்தவர்களிடம் பேசிப்பழக செய்தாள்.

யாரும் இல்லாமல் வளர்ந்ததால் சுனிதாவை சகோதரியாகவே பாவித்தாள்.

சண்டை முகம் சுழித்தள் இப்படி எதுவுமே இல்லாம ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போகும் அந்த வீடு அவளுக்கு சொர்க்கமாகவே தெரிந்தது.

ஒரு நாள் இருப்பதற்குள்ளகவே ஓராயிரம் பிரச்சனைகள் கொண்டுவரும் அவர்கள் வீடு மாதிரியல்ல இது.

ஜெபா பேசாம இருக்கறது மட்டுந்தான் அவளுக்கு நெருஞ்சிலாய் நெஞ்சில் குத்தியது..

ஒருவாரம் சென்றிருக்கும் ஜெபா இப்போதும் அவளுடன் பேசாமலயே இருந்தான்.

திரும்பவும் அவனுக்கு போனில் அழைத்து பார்த்தாள் அழைப்பு எடுக்கபடவே இல்லை. இப்படியாக ஒரு பத்து முறையாவது அழைத்திருப்பாள் அந்த பக்கமிருந்து எந்த பதிலுமில்லை.

மெசேஜ் செய்தாள் மன்னிப்பு கேட்டுஅது பார்க்கப்படவேயில்லை. இறுதியாக ஒரு முடிவெடுத்து அனுராதாவிடம் சென்று நின்றவள்

" ம்மா,நான் அவங்ககூட புனேக்கு போகட்டுமா அவங்க அங்க தனியா இருக்காங்க "

இதைக்கேட்டு லேசாக சிரித்தவர் அவர் கனவரின் காதில் போட்டு வைக்க

அவர் சரியாக புரிந்துக்கொண்டார் சிறுசுகளுக்குள்ள ஏதோ பிரச்சனைப்போல என.

உடனே ஜெபாவிற்கு அழைத்து விசயதத்தை சொல்ல அவன் என்ன சொன்னான் என்று இவளுக்குத் தெரியாது.

அடுத்த நாள் மோனலை அழைத்துக்கொண்டு திருவனந்தபுரம் ஏர்போர்ட்ல டிக்கட்ட கையில கொடுத்து அங்க உன் வீட்டுக்காரன் கூப்பிட வந்திருவான் போ என வழி அனுப்பி வைத்தார்.

புனேயில் இறங்கும் போதுதான் லேசாக பயம் வந்தது அவங்க பேசுறவரைக்கும் பொறுமையா இருந்திருக்கனுமோ அவசரபட்டுட்டனோ என பல சிந்தனை கால்கள் பின்ன மெதுவாக நடந்தவள் அவனைத்தேட யாருமே இல்லை .

என்ன செய்ய வெயிட் பண்ணனுமா என யோசித்து நிற்க கண்களில் நீர் நிறைந்தது எதோ மறுபடியும் நிராதரவா

நிற்பதுபோல அவளுக்கு தோன்றியது.

அருகில் யாரோ நிற்க சட்டென விலகிப்

பார்க்க அவளது எண்ணத்தின் நாயகனே நின்றான்.

ஒன்றும் சொல்லாமல் நடக்க அவனின் நடை அந்த உடை தந்த கம்பீரம் எல்லாம் சேர்த்து கண்டிப்பா பார்க்கின்றவர்களை கவரும். முன்னாடி நடந்துக்கொண்டே அவளும் வருகிறாளா என்று திரும்பி பார்த்தே சென்றான்.

வண்டியில் ஏறியதும் அங்கயும் அமைதி. ஒரு இடத்தில் நிறுத்த சொல்லி இருவருக்கும் உணவை வாங்கி வரச்சொன்னான்.

வீடு வந்து சேர்ந்ததும் அவனுக்கான உணவை எடுத்து உண்டான். அவளிடம் சாப்பிடுறியானு கூட கேட்கவில்லை அவளும் அவன் செய்கையை பார்த்துக் கொண்டிருந்தாள். உண்டு முடித்து கிளம்பி சென்றுவிட்டான்.

ஒரு வார்த்தை சொன்னதுக்கா( ஒரு வார்த்தையும் திருவார்த்தைம்மா கொலைக்கரான்றது லேசானா வார்த்தையா)

எழும்பியவள் அறைக்குள் சென்று முடங்கினாள். சாப்பிடவும் இல்லை பசி மயக்கத்தில் அவள் உறங்கியே போனாள்.

இரவு வெகுநேரம் சென்றுதான் ஜெபா வரவும் வீடு இருட்டாக இருந்தது.

அவன் போகும்போது எப்படி இருந்ததோ அப்படியே இருந்தது சாப்பாடு முதற்கொண்டு...

எல்லா விளக்கையும் போட்டுவிட்டு அவளைப்பார்த்தான் தூங்கிக்கொண்டிருந்தாள்.

குளித்து பிரஷ்ஷாகி வந்தவன் வாங்க்கி வந்த சாப்பாட்டை இரு தட்டுகளில் இட்டு அறைக்கு கொண்டு வந்தவன் டேபிளில் வைத்துவிட்டு

லேசாக தண்ணீர் எடுத்து கைகளினாள் அவள் முகத்தில் உதறினான். சட்டென்று எழுந்தவள் அவனை பார்த்து முறைத்தவள் அவன் சாப்பாட்டை காமிக்கவும் திரும்பவும் படுத்துக்கொண்டாள். காலையில ஊர்லயிருந்து வரும்போது சாப்பிட்டது.பசி கிறக்கம் ஆனாலும் கண்ணை இறுக மூடிக்கொண்டு படுத்துவிட்டாள்.

அவனும் சாப்பிடாமல் அவள் பக்கத்தில் வந்து படுத்துக்கொண்டான்.

மோனல் லேசாக தலையை உயர்த்தி பார்க்க சாப்பாடு அப்படியே இருந்தது.

இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல என எண்ணிக்கொண்டவள் எழும்பி மென் குரலில் " பசிக்குது " என சொல்லவும் விலகி படுத்தான் அவள் இறங்குவதற்காக.

அவள் சென்று தட்டை எடுத்து சாப்பிட உட்கார அவன் அவளைத்தான் பார்த்திருந்தான் ,ஏன் பார்த்தான் என தெரியல அவளுக்கு அவளும் அவனைத்தான் கண்ணெடுக்காமல் பார்த்தான்.

அவனுக்கு சாப்பிட தட்டை எடுத்து கொடுத்தாள் ஒன்னும் சொல்லாமல் தட்டை வாங்கி சாப்பிட ஆரம்பித்தான்.

அவள் சாப்பாட்டை மெதுவாக சாப்பிட அலைந்துக்கொண்டிருந்தாள்.

ஜெபா சாப்பிட்டு முடித்த உடன் வெளியே பால்கனிக்கு சென்றுவிட்டான். பாதி சாப்பாட்டை முடித்து சாப்பிட முடியாமல்

வைத்துவிட்டு வெளிய வர அங்கே அவன் சிகரட்டும் கையுமாக நின்றான்.

வரவர ரெம்ப டென்சன் ஆகுறாங்க போல என எண்ணியவள் அவன் அருகில் சென்று

" மச்சான் " எனக் கூப்பிட்டு முடிக்கறதுக்குள் சிகரட்டை தூக்கிப்போட்டு எதுக்கு இந்த " கொலைகாரனை பார்த்து மச்சானு கூப்பிடுற. அதான் உனக்கு இன்னோரு பாச மச்சான் உயிரோடத்தான இருக்கான் போயி கூப்பிடு. அங்க உன் குடும்பம் காத்திருக்கு போ போயி அவனுங்கள போயி கூப்பிடு "

" யாருமில்லாத அநாதைன்னு தெரிஞ்சிதான கல்யாணம் செஞ்சீங்க

போகறதுக்கு இடம் இல்லனு தெரிஞ்சிகிட்டே வேணும்னே விரட்டுறீங்க . எங்க போவன்னு யோசிக்க கூட இடமில்லாதவளுக்கு இது தேவைதான் . நான் போறேன் யாருக்கும் நான் வேண்டாம் " சொன்னவளைப் பார்த்து அடிக்க கையை ஓங்கியவன் அவள் அரண்டு இரண்டடி பின் சென்றதை பார்த்து கையை கீழ போட்டான்.

" ஒழுங்கா உள்ள போ. இல்ல அடி பிச்சிருவன் வர வர வாய் ரெம்ப பேசற

என்ன பேசனும்னு தெரிய மாட்டுக்கு

போ "

ரெம்ப கோவத்துல இருந்தான்

உள்ளே சென்று படுத்தவளுக்கு பலவித யோசனையில் படுத்திருந்தாள்.